பசுவுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்: ஓவைசி விமர்சனம்| Dinamalar

பசுவுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்: ஓவைசி விமர்சனம்

Updated : ஜூலை 05, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (43) | |
புதுடில்லி: 'ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவிற்கு எதிரானது எனக் கூறியுள்ளா். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை' என, இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி காட்டமாக விமர்சித்து

புதுடில்லி: 'ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவிற்கு எதிரானது எனக் கூறியுள்ளா். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை' என, இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி காட்டமாக விமர்சித்து உள்ளார்.latest tamil newsஉத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் குவாஜா இப்திகார் அகமது எழுதிய தி மீட்டிங் ஆப் மைன்ட்ஸ் எனும் நூல் வெளியிட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் நேற்று பங்கேற்று பேசுகையில், 'இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கக்கூடாது என்று ஒருவர் வெறுப்புடன் கூறினால், வெறுப்பைக் காட்டினால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் நடக்கும்போது, பெரும்பான்மை மக்களிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் குரல் எழ வேண்டும். பசு புனிதமான விலங்கு. ஆனால், சிலர் பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் இது இந்துத்துவாவிற்கு எதிரானது' என்றார்.


latest tamil newsஇதற்கு பதில் தெரிவித்து, அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.,) தலைவர் அசாசுதீன் ஓவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பாகவத், பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவிற்கு எதிரானது எனக் கூறுகிறார். ஆனால் இந்த கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெஹ்லு, அக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்று மடடும் தெரிகிறது. இவ்வாறு ஒவைசி பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X