சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கவிதை கை கொடுக்குமா?

Added : ஜூலை 05, 2021
Share
Advertisement
கவிதை கை கொடுக்குமா?'அரசியலில் இருந்து விலகினால், அடுத்து என்ன செய்யலாம் என்பதை இப்போதே யோசிக்க துவங்கி விட்டார் போலிருக்கிறது' என, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலை பற்றி கிண்டலாக பேசுகின்றனர், டில்லியில் வசிக்கும் சக அரசியல்வாதிகள். கபில் சிபல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்; பிரபலமான வழக்கறிஞரும்

 அக்கம் பக்கம்


கவிதை கை கொடுக்குமா?



'அரசியலில் இருந்து விலகினால், அடுத்து என்ன செய்யலாம் என்பதை இப்போதே யோசிக்க துவங்கி விட்டார் போலிருக்கிறது' என, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலை பற்றி கிண்டலாக பேசுகின்றனர், டில்லியில் வசிக்கும் சக அரசியல்வாதிகள். கபில் சிபல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்; பிரபலமான வழக்கறிஞரும் கூட. காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த கபில் சிபல், சமீப காலமாக மோதல் போக்கை பின்பற்றுகிறார்.
காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்படாதது குறித்தும், கட்சி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்தும், கபில் சிபல் உள்ளிட்ட, 23 மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்து, கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதனால் கபில் சிபல் உள்ளிட்ட தலைவர்களை காங்., மேலிடம் ஓரம் கட்டி வைத்துள்ளது. ஆனால் அவர், இதற்கெல்லாம் சளைத்தவராக தெரியவில்லை. கவிதை எழுதுவதில் அனுபவம் உள்ள கபில் சிபல், தற்போது சில கவிதைகளை எழுதி, அவற்றை புத்தகமாக வெளியிடும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
கபில் சிபலின் மருமகள் ஷிவானியும், கவிதை எழுதுவதில் கில்லாடி என்பதால், மாமனாருக்கு உதவி வருகிறார். 'அரசியல் கை கொடுக்காவிட்டாலும், கவிதை கை கொடுக்கும் என கபில் சிபல் உறுதியாக நம்புகிறார். அவரை கரை சேர்க்க போவது அரசியலா, கவிதையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்' என்கின்றனர், அவரது நண்பர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X