உலகை குடும்பமாக பார்ப்பதே இந்திய கலாசாரம்: மோடி

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி : ''உலகத்தையே ஒரு குடும்பமாக பார்ப்பது தான் இந்தியாவின் கலாசாரம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 'கோ-வின்' இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியது.முன்பதிவை நீக்கும் வசதி அதில் தடுப்பூசி போடுவதற்கு பெயர் பதிவு செய்யும் வசதியும், தடுப்பூசி கையிருப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட தகவல்களும்
உலகம்,  குடும்பம், இந்திய கலாசாரம்,  மோடி

புதுடில்லி : ''உலகத்தையே ஒரு குடும்பமாக பார்ப்பது தான் இந்தியாவின் கலாசாரம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 'கோ-வின்' இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியது.


முன்பதிவை நீக்கும் வசதி



அதில் தடுப்பூசி போடுவதற்கு பெயர் பதிவு செய்யும் வசதியும், தடுப்பூசி கையிருப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ஒருவருக்கு தடுப்பூசி போடுவதற்கான நாள், நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த முன்பதிவை நீக்கும் வசதியும் உள்ளது. இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, அதற்கான சான்றிதழையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கனடா, மெக்சிகோ, நைஜீரியா, பனாமா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 50 நாடுகள், கோவின் இணையதளத்தை கொரோனா தொடர்பான பதிவுகளுக்கான பொதுத்தளமாக பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், 'கோவின் குளோபல்' மாநாட்டை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று துவக்கி வைத்தார்.

இதில், பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதள பயன்பாடு, உலகத்திற்காக திறக்கப்படுகிறது.



'வசுதைவ குடும்பகம்'


தொற்றுநோயின் துவக்கத்திலிருந்தே, இந்த போரில், உலகளாவிய சமூகத்துடன் தன் அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதி எடுத்துள்ளது.கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டம்,தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்தது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையிலான தொற்றுநோய் தற்போது ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாடும், அந்த நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இது போன்ற ஒரு சவாலை தனியாக தீர்க்க முடியாது என்பதை இந்த அனுபவம் வெளிக்காட்டியுள்ளது.

'வசுதைவ குடும்பகம்' என்பது தான் இந்தியாவின் உயர்ந்த பண்பு. அதாவது உலகையே ஒரு குடும்பமாக பார்ப்பது தான் இந்தியாவின் கலாசாரம்; நாகரிகம்.இந்த கலாசாரம், 'ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்'என்ற தத்துவத்தின் அடிப்படை உண்மையை பலருக்கு தற்போது உணர்த்தியுள்ளது. பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவர, மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசி தான். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
06-ஜூலை-202123:35:16 IST Report Abuse
g.s,rajan அப்போ குடும்பம் இல்லேன்னா சொத்து இருக்கக் கூடாதா ???இது எந்த ஊரு நியாயம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-ஜூலை-202123:23:09 IST Report Abuse
g.s,rajan கொரோனா மோடிஜியால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட எகனாமிக் கிரைசிஸ் ,ஏற்கனவே இந்தியப் பொருளாதாரம் படுத்து இருந்த சூழலில் மோடிஜிக்கு நன்றாக கை கொடுத்தது கொரோனா ,கொரோனாவை வைத்து மோடிஜி இந்தியப் பொருளாதாரத்தில் புகுந்து விளையாடி விட்டார் .நூற்று நாற்பத்தி நான்கு தடை உத்தரவைக் கேடயமாகப் பயன்படுத்தி தவறாக பயன்படுத்தி வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்பட்டது தடை உத்தரவு இருந்தால் ஊர்வலம் போகமுடியாது ஆர்பாட்டம் தர்ணா செய்ய முடியாது .பல வங்கிகளை ஒருங்கிணைத்து வங்கிகளில் பலரைக் காலி செய்தார் .ரிசர்வ் வங்கியின் அவசர கால நிதி ஒரு லட்சத்தி எண்பத்தி ஆறாயிரம் கோடி ருபாய் சொளையா இருந்தது அதை சும்மாத்தானே இருக்கு என்று கூறி அம்பானி அதானி மற்றும் பல இதர பிரபல கோடீஸ்வரர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்து விட்டனர் ,இதற்கு நிர்மலாவும் உடந்தை .ஏன் இதை பொதுத்துறை நிறுவனங்களை சீர் செய்ய பயன்படுத்தி இருக்கலாமே அவற்றை மூடாமல் காப்பாற்றி இருக்கலாமே எதற்காக தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் .மொத்தத்தில் இந்தியாவின் அவசர கால நிதி கோவிந்தா ,கோவிந்தா . ஜி.எஸ்.ராஜன், சென்னை ,...
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-ஜூலை-202123:14:54 IST Report Abuse
g.s,rajan அதான் மோடிஜி குடும்பமாக உள்ள உலக நாடுகள் எல்லாத்தையும் சுத்திப் பார்த்தீங்களா மோடிஜி ???நீங்க பிரதமர் சுத்திப் பார்த்துட்டீங்க,ஆனா நாங்க ???. ஜி.எஸ்,ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X