'டூல்கிட்'க்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Updated : ஜூலை 05, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : காங்கிரசின், 'டூல்கிட்' விவகாரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா சூழலை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் நற்பெயரை களங்கப்படுத்த, காங்., கட்சியினர், டூல்கிட் எனப்படும் வழிகாட்டுதல்கள் அடங்கிய தொகுப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக, பா.ஜ., குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரம் பற்றி டில்லி போலீசார் விசாரித்து
'டூல்கிட்'க்கு எதிரான  மனு  உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி : காங்கிரசின், 'டூல்கிட்' விவகாரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா சூழலை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் நற்பெயரை களங்கப்படுத்த, காங்., கட்சியினர், டூல்கிட் எனப்படும் வழிகாட்டுதல்கள் அடங்கிய தொகுப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக, பா.ஜ., குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரம் பற்றி டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷசாங்க் சேகர் ஷா வழியாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், 'காங்கிரசின் டூல்கிட் விவகாரம் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதாவது: காங்கிரசின் டூல்கிட்டை மனுதாரர் விரும்பவில்லை என்றால் அதை பார்க்காமல் தவிர்த்துவிடலாம். இவை அனைத்தையும் அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகளில் ஒன்றாக தான் பார்க்க வேண்டும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதில் அரசியல் பிரசாரங்களை நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது. நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிக்கும் இது போன்ற மனுக்களை தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHARUMATHI - KERALA,இந்தியா
06-ஜூலை-202113:18:07 IST Report Abuse
CHARUMATHI பின்ன எந்த கிரௌண்ட்ல கிஷோர் கே ஸ்வாமி அர்ரெஸ்ட் SEITHINGA
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
08-ஜூலை-202103:13:06 IST Report Abuse
iconoclastஅயோக்கியனுக்கு வக்களத்தா..அவன் பேசினத்துக்கு இந்த தண்டனை ரொம்ப கம்மி..பொதுவெளியில் எல்லா மகளிரையும் தவறாக பேசியுள்ளான்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஜூலை-202110:07:31 IST Report Abuse
duruvasar கரெக்ட் . வியாபரின்னா ஜெலுசில் வாங்கலையோ ஜெலுசில்ன்னு சத்தமா கூவி கிட்டு தான் போவான். சத்தம் அதிகம்னா கதவை சாத்திக்கிட்டு உட்கார வேண்டியதுதான்.
Rate this:
Cancel
S.Murali - Kumbakonam,இந்தியா
06-ஜூலை-202109:44:41 IST Report Abuse
S.Murali நீதிபதிகள் அரசியலால்தான் பதவிக்கு வருகிறார்கள் 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் , அவர்களால் பதவிக்கு வந்தவர்கள் ஏராளம் விசுவாசத்துக்கு பேர்போனவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X