புதுடில்லி : காங்கிரசின், 'டூல்கிட்' விவகாரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா சூழலை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் நற்பெயரை களங்கப்படுத்த, காங்., கட்சியினர், டூல்கிட் எனப்படும் வழிகாட்டுதல்கள் அடங்கிய தொகுப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக, பா.ஜ., குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரம் பற்றி டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷசாங்க் சேகர் ஷா வழியாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், 'காங்கிரசின் டூல்கிட் விவகாரம் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதாவது: காங்கிரசின் டூல்கிட்டை மனுதாரர் விரும்பவில்லை என்றால் அதை பார்க்காமல் தவிர்த்துவிடலாம். இவை அனைத்தையும் அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகளில் ஒன்றாக தான் பார்க்க வேண்டும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதில் அரசியல் பிரசாரங்களை நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது. நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிக்கும் இது போன்ற மனுக்களை தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE