பொது செய்தி

தமிழ்நாடு

'மக்களை காப்பதே அரசின் முதல் பணி '

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை :''மக்களை காப்பதே அரசின் முதல் பணி. எனவே, அத்தகைய பணிக்கு நாம் அனைவரும் சேர்ந்து, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என, மாநில பேரிடர் ஆணைய கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின், நடப்பு ஆண்டிற்கான முதல் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.அதில், துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி.,
'மக்களை காப்பதே அரசின் முதல் பணி.

சென்னை :''மக்களை காப்பதே அரசின் முதல் பணி. எனவே, அத்தகைய பணிக்கு நாம் அனைவரும் சேர்ந்து, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என, மாநில பேரிடர் ஆணைய கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின், நடப்பு ஆண்டிற்கான முதல் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.அதில், துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் சியதாவது:பேரிடர் தாக்கத்தின் போது ஏற்படும் மனித உயிரிழப்புகள், பொது சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை, வெகுவாக குறைக்க வேண்டும். அனைத்து வகையான பேரிடர்களையும், திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக, தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம்.


சீராக இல்லை



சமீபகாலமாக, இயற்கையால் மட்டும் பேரிடர்கள் ஏற்படுவதில்லை; மனிதர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பருவகால சூழ்நிலை தற்போது சீராக இல்லை. இத்தகைய சூழலை புரிந்து, நாம் நடக்க வேண்டும். பேரிடர் தடுப்பு பணி என்பது, பேரிடர் காலங்களில் மக்களை காப்பது மட்டுமல்ல; பேரிடர்கள் ஏற்படாத சூழலையும்
உருவாக்க வேண்டும்.இயற்கை பேரிடர்களால், நகர்ப்புறங்களில் ஏழை, எளிய மக்களும், கிராம பகுதிகளில் விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாத்து, இழப்புகளை ஈடு செய்து மறுவாழ்வுக்கு வழிகோள்வதே அரசின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.
பேரிடர்களின் அபாயம் மற்றும் பாதிப்புகளை குறைப்பதற்கான, முன்னெச்சரிக்கை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை, பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனை மக்களிடம் மேம்படுத்த வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாக விரிவுப்படுத்த வேண்டும். பேரிடர் மீட்பு தொடர்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்களுக்கு அரசு துறைகள் வாயிலாக, உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும்.


முக்கியத்துவம்



இதற்காக, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் வாயிலாக, சிறப்பான திட்டம் வகுக்கப்பட்டு, அதை நடைமுறைப்படுத்த வேண்டும். பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை செய்திகள், அனைவரையும் சென்றடையும் வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களை காப்பதே அரசின் முதல் பணி. எனவே, அத்தகைய பணிக்கு நாம் அனைவரும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


நாளை திருவாரூர் செல்கிறார் முதல்வர்



முதல்வர் ஸ்டாலினின் சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம் திருக்குவளை. அங்கு அவரது தாத்தா முத்துவேல், தந்தை கருணாநிதி வாழ்ந்த வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு, ஸ்டாலின் அவ்வப்போது செல்வது வழக்கம். முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, ஸ்டாலின் நாளை அங்கு செல்கிறார்.
தலைமை செயலகத்தில் இன்று காலை, தொழில்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் முடிந்ததும், மாலையில் விமானத்தில் திருச்சி செல்கிறார். நாளை அங்கிருந்து, சாலை மார்க்கமாக திருவாரூர் செல்ல உள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்; பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kattus - chennai,இந்தியா
06-ஜூலை-202121:59:20 IST Report Abuse
kattus டோப்பா வெச்சிக்கினு சொம்மா ஷாக்கா கீறார்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
06-ஜூலை-202120:54:50 IST Report Abuse
RajanRajan உண்மைக்கும் ஒங்க பரம்பரைக்கு என்னிக்காச்சும் சம்பந்தம் இருந்ததுண்டா? இல்லையே. பாரு இப்போ கூட சைக்கிள் வுடுறோம்னு ஒரு களோபரம் பண்ணி அத்தனை பேரையும் சைக்கிள் மிதிக்க விட்டு ஆலோசனை குழு தலைவர் அண்ணா மட்டும் மாஸ்க் போடாம எலெக்ட்ரிக் சைக்கிள் பெடலில் காலை வைத்து போட்டோ போஸ் கொடுத்து மொத்த ஊரையும் ஏமாத்துற வித்தை உங்கள விட்டா எவனுக்கு தெரியும். டூபாக்கூர்களா. உங்க இம்சை தாங்க முடியல்லே
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
06-ஜூலை-202113:14:45 IST Report Abuse
sathish ந\ம் குடு\ம்ப \ சொந்த மக்களை காப்பதே இந்த அரசின் \முக்கிய கட\மை. போட்டத விட்டதை பின்னே எப்படி கொள்ளை அடிப்பதா\ம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X