அரசியல் செய்தி

தமிழ்நாடு

9ம் தேதி மாவட்ட செயலர்களுடன் ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்.,ஆலோசனை

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட செயலர்களுடன், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் 2019ம் ஆண்டு, 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. காஞ்சிபுரம், விழுப்புரம், வேலுார், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக, செங்கல்பட்டு,
  மாவட்ட செயலர்கள்,  9ம் தேதி  ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட செயலர்களுடன், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் 2019ம் ஆண்டு, 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

காஞ்சிபுரம், விழுப்புரம், வேலுார், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என, ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதனால், அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.வரும் செப்., மாதத்திற்குள் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த, ஆளுங்கட்சி தயாராகி உள்ளது. சமீபத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.,வும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள, ஒன்பது மாவட்ட செயலர்களுடன், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆலோசனை நடத்துகின்றனர்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்த தொகுதிகளுக்கான மாவட்ட செயலர்களிடம், வரும் 12ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள், அ.தி.மு.க., அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது.தேர்தலில் செலவு செய்யாமல், கட்சி வழங்கிய பணத்தை சுருட்டிய புகார்; தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ளடி வேலை பார்த்த புகார் தொடர்பாக விசாரிக்கப்பட உள்ளது.




சசிகலா ஆதரவு நிர்வாகிகள் நீக்கம்!



சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று நீக்கப்பட்டனர்.இது குறித்து ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., கூட்டறிக்கை:கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட, சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலர் செல்லத்துரை, கெங்கானாபுரம் ஒன்றியம், தங்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பாலாஜி.சேலம் புறநகர் மாவட்ட மீனவர் பிரிவு முன்னாள் செயலர் சுரேஷ், நரசிங்கபுரம் நகர மாவட்ட பிரதிநிதி மீனா தியாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலர் ஆனந்த், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி இணை செயலர் வேங்கையன். துாத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெ., பேரவை இணை செயலர் ரூபன் வேலவன், விளாத்திக்குளம் பேரூராட்சி ஜெ., பேரவை செயலர் பொன்ராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
06-ஜூலை-202119:33:55 IST Report Abuse
Narayanan முதலில் சசிகலாவை எதிர்த்து ஒரு தீர்மானம் . கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சிக்கு களங்கம் கற்பிப்பதை எதிர்த்து தீர்மானம் அவசியம் .இப்போதைய அரசு அறிவிக்கும் எந்த திட்டத்திற்கும் , நல்லதை பாராட்டியும் தவறை சரியாக மக்களுக்கு புரியும் விதத்தில் அறிக்கை விடவேண்டும் . இதில் இருவரின் பங்கும் சமமாக பார்த்துக்கொள்ளவேண்டும்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
06-ஜூலை-202114:33:44 IST Report Abuse
vpurushothaman விட்டதைப் பிடியுங்கள். இரட்டை இலை மீண்டும் துளிர்விட ஒற்றுமை தேவை. ஓ.பி - இ.பி ஹேப்பியா செயல்படுங்க. ஹோப்போடு செயல்படுங்க அம்மா ஆவி துணை நிற்கட்டும்.
Rate this:
Cancel
06-ஜூலை-202113:45:16 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இவர்கள் செயல் சிரிப்பா தான் இருக்கு , எல்லா மாவட்டங்களிலும் சசி எதிர்ப்பு தீர்மானம், அந்த அம்மா ADMK வில் இல்லை இல்லாத ஒருவரை எப்படி நீக்கினார்களா எவ்வவலு கேவலம் பாருங்கள் , எதை தின்னல் பித்தம் தெளியும் என்று தெரியாமல் அதுவும் கூடவே ஒரு எட்டப்பன் சின்ன டயர் , இவன் இபோது EPS ஐ கவிழ்க்கலாம் என்று இருக்கிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X