ரூ.5.89 கோடி லஞ்சம் ஐ.சி.எப்., மாஜி கைது| Dinamalar

ரூ.5.89 கோடி லஞ்சம் ஐ.சி.எப்., 'மாஜி' கைது

Updated : ஜூலை 06, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (10) | |
சென்னை : தொழில் அதிபர்களிடம், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, ஐ.சி.எப்.,பின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். மூன்று ஆண்டுகளில், 5.89 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில், மெக்கானிக்கல் பிரிவு பொறியாளராக கத்பால், 2019 முதல், 2021 மார்ச், 31 வரை பணியாற்றி
The CBI today arrested former Principal Chief Mechanical Engineer  ICF,  Perambur, Chennai for demanding & accepting an alleged bribe of Rs. 50 lakh. Searches in 9 places led to seizure of cash Rs. 2.75 crore and 23 kg gold.ரூ .50 லட்சம் லஞ்சம், முன்னாள் ஐசிஎப் முதன்மை, தலைமை பொறியாளர், கைது

சென்னை : தொழில் அதிபர்களிடம், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, ஐ.சி.எப்.,பின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். மூன்று ஆண்டுகளில், 5.89 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில், மெக்கானிக்கல் பிரிவு பொறியாளராக கத்பால், 2019 முதல், 2021 மார்ச், 31 வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.


latest tamil news
இவர் தன் பணிக்காலத்தில், இணைப்பு பெட்டி தயாரிப்பதற்கு டெண்டர் விடும் பணிகளுக்காக, தொழில் அதிபர்களிடம், மூன்று ஆண்டுகளில், 5.89 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த, பெண் தொழில் அதிபர் ஒருவரிடம், லஞ்சமாக வாங்கிய பணத்தை கொடுத்து வைத்துள்ளதும், அதில் முதல் தவணையாக, 50 லட்சம் ரூபாய் பெற்றதும் தெரிய வந்தது.இந்நிலையில், இரண்டாவது தவணையாக, 50 லட்சம் ரூபாயை, டில்லியில் அரசு ஊழியராக பணிபுரிந்து வரும், தன் சகோதரர் வாயிலாக, கத்பால் வாங்கி உள்ளார்.
தகவல் அறிந்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவரது சகோதரர் உள்ளிட்ட, நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.மேலும், சென்னை உள்பட, கத்பாலுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் என, ஏழு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, 2.70 கோடி ரூபாய்; 23 கிலோ தங்க நகைகளை கைப்பற்றினர். கத்பாலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X