மேகதாதுவை கைவிட மாட்டோம்: கர்நாடக அமைச்சர் அடாவடி பதில்

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பெங்களூரு :''மேகதாது குடிநீர் திட்டத்தை, யார் எவ்வளவு தடை போட்டாலும் செயல்படுத்தியே தீருவோம்; எந்த காரணத்துக்கும் விட மாட்டோம்,'' என, கர்நாடக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என பல முறை கூறியும், கர்நாடக அரசு
மேகதாது, கைவிட மாட்டோம், கர்நாடக அமைச்சர் அடாவடி

பெங்களூரு :''மேகதாது குடிநீர் திட்டத்தை, யார் எவ்வளவு தடை போட்டாலும் செயல்படுத்தியே தீருவோம்; எந்த காரணத்துக்கும் விட மாட்டோம்,'' என, கர்நாடக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என பல முறை கூறியும், கர்நாடக அரசு அத்திட்டத்தை கைவிடவில்லை.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார்.இது குறித்து, கர்நாடக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
மேகதாது திட்டம் குடிநீர் திட்டம் என்பதை முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் விவரித்துள்ளார்.

ஆனாலும் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவது சரியல்ல.தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்த முறையே சரியில்லை. கர்நாடகாவின் ஒவ்வொரு விஷயத்துக்கும் இடையூறு விளைவிப்பதே அவரது நோக்கம். இது பற்றி நாங்கள் கவலைப்படாமல், மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்; எந்த காரணத்துக்கும் கை விட மாட்டோம்.ஏற்கனவே விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. மேகதாது திட்டத்தை நாம், இன்றோ, நேற்றோ வகுக்கவில்லை. இது, 40 ஆண்டு பழமையான திட்டம். மாநில அரசு நான்கு விதமான திட்டங்களை தயாரித்துள்ளது.

இத்திட்டம் தேசிய நீர்மின் உற்பத்தி கழகத்துக்கும் அனுப்பப்பட்டது. திட்டத்தை பரிசீலித்து, எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென ஆலோசனை கூறியது.அதன் பிறகும் கூட திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டது. 2012ல் புதிதாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க குடிநீர் திட்டமாக இருந்தும், தமிழக அரசு அவ்வப்போது இடையூறு செய்வது ஏன் என தெரியவில்லை.உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட போராட்டத்தில் கர்நாடகாவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kattus - chennai,இந்தியா
06-ஜூலை-202121:58:20 IST Report Abuse
kattus எம்மவன் ஹாப்பி, தண்ணி வரலைனா மணல் அல்றது ஈசி, எட்டி அவர்களே அணை விரைவில் கட்டி தண்ணீர் வருவதை தடுக்கவும், கட்டுஸ் கடிதம் from narags
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
06-ஜூலை-202119:44:49 IST Report Abuse
siriyaar USER NAME MUST BE SHORTER AND DECENT: COORDINATOR
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
06-ஜூலை-202116:56:50 IST Report Abuse
V Gopalan Bengaluru has become a hum of employment opportunities, citizens of all over India have settled down. Hence, the necessity of drinking water is increasing day by day. Hence construction of Dam at Meghadatu is absolutely essential to meet the growing demand of water for Bengaluru, Kolar, Chickaballapur et all. When there is an agreement as per the Tribunal/Court, the water will be released to Tamilnadu, hence where is the question of objections from Tamilnadu side. It is a mistake committed by Chief Minister of Karnataka sending a letter. This was planned by Congress, why the Congress party of Tamilnadu is maintaining silence? Cauvery is flowing maximum mileage in Tamilnadu and how many check dams are constructed, how many canals are de-siltation done, did any one go and inspect as to whether the water is reaching tail end? The precious water is being flown into ocean. The objection of Tamilnadu is: If I loose one eye other should loose two. Because of the objections of Tamilnadu, the sufferers only general public of both the States.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X