கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'நீட்' ஆய்வு குழுவை எதிர்த்த வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை ;'நீட்' பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 13ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. 8ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி
'நீட்' ஆய்வு குழு,எதிர்த்த வழக்கு, விசாரணை, தள்ளிவைப்பு

சென்னை ;'நீட்' பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 13ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. 8ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு, பொது மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.


மோதல்



இந்நிலையில், குழு அமைத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, தி.மு.க., சார்பிலும், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாணவி நந்தினி என்பவரும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இவ்வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, வாதாட துவங்கினார்.

அப்போது, தலைமை நீதிபதி, 'இவ்வழக்கில் இடையூட்டு மனுக்களை அனுமதிக்கக் கோரப்பட்டுள்ளது' என்றார்.அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இரு நாட்களில் பதில் மனு தாக்கல் செய்வதாக கூறினார். மாணவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்பி.வில்சன், ''குழு அமைப்பது ஒன்றும் புதிதல்ல; கொள்கை ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. பொது நலன் மீறப்படவில்லை,'' என்றார். அதற்கு, வழக்கறிஞர் ராகவாச்சாரி, ''சட்டரீதியாக தான் எதிர்க்கிறோம்,'' என்றார்.


மனு தாக்கல்



இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:வழக்கில் இணைக்கக் கோரி, பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கில் முக்கியத்துவம் இருப்பதால், அரசியல் கட்சிகள், துறையில் உள்ளவர்கள், தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றனர்.
ஏற்கனவே, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்து விட்டது. மத்திய அரசு தரப்பில், இரண்டு நாட்களில் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, வரும் 8ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.விசாரணை, வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
06-ஜூலை-202123:18:01 IST Report Abuse
KumariKrishnan Bjp தி மு க வி ல் ச ன்
Rate this:
Cancel
06-ஜூலை-202122:31:06 IST Report Abuse
ஆப்புசாமி உயர்நீதி மன்றம் விசாரிச்சு தீர்ப்பு சொல்ல நாலஞ்சு வருஷம் ஆகும்.அதுவரை கமிஷன் கடமையைச் செய்யலாம். ஆபீஸ், கம்ப்யூட்டர் எல்லாம் குடுத்திடாங்களா?
Rate this:
Cancel
R.Easwar - dewas,இந்தியா
06-ஜூலை-202113:55:49 IST Report Abuse
R.Easwar அவர்களே கொண்டு வருவார்கள் அவர்களே குழு அமைப்பார்கள், மாணவர்கள் எதிர்காலம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X