புதுடில்லி : பஞ்சாபை தொடர்ந்து ஹரியானாவிலும், காங்கிரசில் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரசில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் அமைச்சர் சித்துவுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. மேலிட தலைவர்கள் பேச்சு நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில், பஞ்சாபின் அண்டை மாநிலமான ஹரியானாவிலும், காங்கிரசில் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இந்த மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவுக்கும், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளாக தன் ஆதரவாளர்களை நியமிக்க, குமாரி செல்ஜா விரும்புகிறார். இதற்கு, ஹூடா கோஷ்டி எதிர்ப்பு தெரிவிததுள்ளது. ஹூடா கோஷ்டியை சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி வேணுகோபாலை சந்தித்தனர். 'மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்கு முன் எங்களின் கருத்துக்களை கட்சி தலைமை கேட்க வேண்டும்' என, வேணுகோபாலிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE