அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஒன்றிய அரசு என்பதால் எந்த பயனும் இல்லை'

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை :''மத்திய அரசை, ஒன்றிய அரசு என, சொல்வதில் பயனில்லை; மத்திய அரசு என்று தான் பா.ம.க., அழைக்கும்,'' என, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி எம்.பி., கூறினார்.அவர் அளித்த பேட்டி:பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்' என, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,
 'ஒன்றிய அரசு, எந்த பயனும் இல்லை'

சென்னை :''மத்திய அரசை, ஒன்றிய அரசு என, சொல்வதில் பயனில்லை; மத்திய அரசு என்று தான் பா.ம.க., அழைக்கும்,'' என, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி
எம்.பி., கூறினார்.

அவர் அளித்த பேட்டி:
பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்' என, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'ஆட்சிக்கு வந்ததும், எப்போது அமல்படுத்துவோம் என்ற தேதியை, நாங்கள் நிர்ணயிக்கவில்லை' என, தி.மு.க., சொல்வது, ஏற்க முடியாது. பசிக்கும் போது தான் உணவு தர வேண்டும்; நான்கு நாட்கள் கழித்து கொடுப்பதால், எந்த பயனும் இல்லை.செங்கல்பட்டில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவக்கவும், கோதாவரி - காவிரி திட்டத்தை செயல்படுத்தவும், ராஜ்யசபாவில் அழுத்தம் கொடுப்பேன்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை உரிமை கிடைக்க முயற்சி எடுப்பேன். கொரோனா, 2வது அலையை, தமிழக அரசு கட்டுப்படுத்தி இருக்கிறது. 3வது அலை வராமல் தடுக்க வேண்டும்.மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, சொல்வதில் பயனில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தில், 'யூனியன் கவர்ன்மென்ட்' என, இருந்தாலும், மத்திய அரசு என்று தான், பா.ம.க., அழைக்கும். பெயரை மாற்றி அழைப்பதால், ஒன்றும் ஆகப்போவதில்லை.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களை தி.மு.க., அரசு பெற வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறினார்.


நிருபராக மாறி ராமதாஸ் கேள்வி!



'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: நிருபராக மாறி, நானே கேள்வி கேட்டு, நானே பதிலை சொல்கிறேன். 'நிழல் பட்ஜெட்டை வெளியிடும் நீங்கள், எப்போது நிஜமான பட்ஜெட் போட போகிறீர்கள்?'
நாங்கள், 'மீடியா'க்களுடன் நிரந்தர கூட்டணி வச்சுக்கிறோம். மீடியாக்கள் ஒத்துழைப்பு தந்தால், இன்னும் ஐந்து ஆண்டுகளில், சட்டசபையில் நிஜமான பட்ஜெட்டை போடுவோம். நிருபர்கள் குதர்க்கமான, குத்தலான கேள்விகளை கேட்க கூடாது. நிருபர்களின் கேள்வி, எங்களை செயல்பட துாண்டும் வகையில் அமைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூலை-202122:37:59 IST Report Abuse
ஆப்புசாமி சும்மா பேசிக்கிட்டே இருந்தா எப்புடி?சாலையோரங்களில் மிஞ்சியிருக்கிற மரங்களை வெட்டி ரோடில் போட்டு போராடுனாத்தானே அரசு கவனிக்கும்? பசிக்குதுன்னு சொன்னா பத்தாது?அழவும் தெரியணும்.
Rate this:
Cancel
06-ஜூலை-202117:32:10 IST Report Abuse
அப்புசாமி அன்புமணி அமைச்சரா இல்லாத அரசெல்லாம் ஒரு அரசா?
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
06-ஜூலை-202116:32:40 IST Report Abuse
பாமரன் அலோ எச்சுச்மி சின்ன டவுசர் அன் பெரிய டவுசர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X