உதவி கேட்ட மாணவரை போனில் திட்டிய எம்.எல்.ஏ.

Added : ஜூலை 06, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள எம்.எல்.ஏ.வும், மலையாள நடிகருமான முகேஷ், தன்னிடம் போன் வாயிலாக உதவி கேட்ட மாணவரை சரமாரியாக திட்டிய ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவரை சமாதானப்படுத்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கொல்லம் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் முகேஷ். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர், மலையாளத்தில் பிரபலமான
கேரளா, மார்க்சிஸ்ட். முகேஷ், எம்எல்ஏ, மாணவர், உதவி,

திருவனந்தபுரம்: கேரள எம்.எல்.ஏ.வும், மலையாள நடிகருமான முகேஷ், தன்னிடம் போன் வாயிலாக உதவி கேட்ட மாணவரை சரமாரியாக திட்டிய ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவரை சமாதானப்படுத்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொல்லம் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் முகேஷ். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர், மலையாளத்தில் பிரபலமான நடிகர். ஐந்தாம்படை, ஜாதிமல்லி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.


latest tamil news



இவரிடம் மாணவர் ஒருவர் போன் செய்து உதவி கேட்கிறார்.அதற்கு, 'இந்த எண்ணை தந்தது யார்' என அவர் கேட்க, 'நண்பர் தந்தார்' என மாணவர் பதிலளிக்கிறார். ஆத்திரமடைந்த முகேஷ், 'அந்த நண்பனை அடிக்க வேண்டும். உன் தொகுதி எம்.எல்.ஏ., யார்' என கேட்கவே, மாணவர் 'தெரியாது' என்கிறார்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற முகேஷ், 'எம்.எல்.ஏ., பெயர் தெரியாத உன்னை துடைப்பத்தால் அடிக்க வேண்டும்' என்கிறார்.இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது காங்., சதி என குற்றம் சாட்டிய முகேஷ், இது குறித்து போலீசில் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் உதவி கேட்கும் மாணவர் எதற்காக பேச்சை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதை அரசியல் ஆக்குவதை உணர்ந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் மாணவரை சி.ஐ.டி.யூ., அலுவலகத்துக்கு அழைத்து வந்து பேசினர். இதையடுத்து முகேஷின் பேச்சை நியாயப்படுத்தும் வகையில் மாணவர் பேட்டியளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஜூலை-202116:17:34 IST Report Abuse
Bhaskaran இந்த ஆள் தான் சரிதாவின் முன்னாள் கணவர் தானே
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
07-ஜூலை-202100:05:02 IST Report Abuse
LAX சிதைச்சு, சின்னாபின்னமாக்கிட்டு, கம்பி கட்றதுல தமிழகத்து தானை & கோ. வையே மிஞ்சிடுவாங்க போல..
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஜூலை-202120:18:16 IST Report Abuse
Vena Suna உதவி கேட்கும் மாணவன் எதற்கு ரெகார்ட் செய்ய வேண்டும் ? அவன் முகேஷ் பெயரை கெடுக்க சதி செய்துள்ளான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X