விருத்தாசலம்: அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இளங்கியனுாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக விருத்தாசலம் பகுதியில் இரவு நேரங்களில் கன மழை பெய்வதால், இளங்கியனுார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் தேங்கி, 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தன.

விவசாயிகள் கூறுகையில், 'அதிகாரிகள், வியாபாரிகள் எடுத்து வரும் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்காக திறந்தும், வியாபாரிகள் மட்டுமே பயனடைகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement