அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லை; டில்லி செல்கிறார் அமைச்சர் மா.சு.,

Updated : ஜூலை 06, 2021 | Added : ஜூலை 06, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக் கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போதிய தடுப்பூசிகள் ஒதுக்கக் கோரி டில்லி செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கோவிட் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று (ஜூலை 05) ஒரேநாளில் தமிழகத்தில் 3,715பேர்
CovidVaccine, Shortage, MaSubramanian, Tamilnadu, Health Minister,கொரோனா, கோவிட், தடுப்பூசி, மா சுப்பிரமணியன், தட்டுப்பாடு, கையிருப்பு, சுகாதாரத்துறை, அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக் கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போதிய தடுப்பூசிகள் ஒதுக்கக் கோரி டில்லி செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கோவிட் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று (ஜூலை 05) ஒரேநாளில் தமிழகத்தில் 3,715பேர் கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கு இதுவரை 1,57,76,860 தடுப்பூசிகள் வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,57,41,118 தடுப்பூசிகள் இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் சூழல் நிலவியுள்ளது.


latest tamil newsஇது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தில் தற்போது கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை. தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் பெறுவதற்காக வரும் வியாழன் (ஜூலை 08) அன்று டில்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்.
மாவட்டங்களில் உள்ள பாதிப்புகள், மக்கள்தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் பிரித்து கொடுக்கப்படுகிறது. மருந்துகளை வீணாக்காமல் திட்டமிட்டு செலுத்தப்படுகிறது. தடுப்பூசி குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை பேப்பரில் தான் அறிக்கை வெளியிடப்படும்' என்றார். தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும்படி கோரிக்கை வைப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டில்லி செல்ல உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
07-ஜூலை-202112:01:26 IST Report Abuse
மணி ..............
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
07-ஜூலை-202102:24:16 IST Report Abuse
BASKAR TETCHANA இவனிடம் மத்திய அரசு மொத்தமாக இரு மாதங்களுக்கு எத்தனை லட்சம் ஊசி கொடுத்தது அதில் எவ்வளவு ஊசிகளை பயன் படுத்தினர் எவ்வளவு ஊசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றார்கள் என்ற விபரங்களை துருவி துருவி கேட்க வேண்டும் அப்போது தான் தெரியும் உண்மையான விபரங்கள். தினமும் இவர்கள் ஊசி இல்லை என்கின்றனர். இதனால் மக்கள் மிகவும் ஊசி இல்லை என்றதும் மனா வேதனையுடன் திரும்புகின்றனர். ஆனால் மத்திய அரசோ ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு லட்சத்துக்கும் மேலாக இருப்பு உள்ளது என்கிறது. இதில் யார் சொல்வது உண்மை என்ற விபரங்களை மத்திய மாநில அரசுகள் தெளிவு படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஜூலை-202119:07:57 IST Report Abuse
duruvasar USER NAME MUST BE SHORTER AND DECENT: COORDINATOR
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X