புதுடில்லி: மத்திய அமைச்சரவை நாளை (ஜூலை 7-ம் தேதி) மாலை 05:30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
மத்திய அமைச்சரவையை விரிவுப்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மூத்த தலைவர்களுடன் பிரதமர் இது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோர், இது தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இதில் அமைச்சரவையிலிருந்து யாரை நீக்குவது, யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெய்க்வாட், கர்நாடக மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். மேலும். ம.பி.,யில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா, அசாமில் இருந்து சர்பானந்தா சோனவல் உள்ளிட்டோர் டில்லிக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து, நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சரவையில், ஜோதிராதித்யா சிந்தியா, சர்பானந்த சோனவல், நாராயன் ரானே, பசுபதி பராஸ், அனுபிரியா படேல், பங்கஜ் சவுத்ரி, ரிடா பகுகுணா ஜோஷி, ராம்ஷங்கர் கதேரியா, வருண், ஆர்சிபி சிங், லல்லன் சிங் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள், அனைவரும் டில்லிக்கு விரைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE