ஸ்டேன் சுவாமி மறைவு: எதிர்க்கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

Updated : ஜூலை 06, 2021 | Added : ஜூலை 06, 2021 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: சமூக ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 2017-ம் ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில், இருதரப்பினருக்கு மோதல் பெருங்கலவரமாக வெடித்து. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள்
 Free Those Jailed In Bhima Koregaon Case: Opposition Leaders To Presidentஸ்டேன் சுவாமி, மறைவு, எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி, கடிதம்

புதுடில்லி: சமூக ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

2017-ம் ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில், இருதரப்பினருக்கு மோதல் பெருங்கலவரமாக வெடித்து. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் மனித உரிமைகள் ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமியை,84 என்பவர் கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமின் கோரி மனு செய்திருந்த நிலையில், உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார்.


latest tamil newsஇந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சோனியா, சரத்பவார், மம்தா, ஸ்டாலின், பரூக் அப்துல்லா, தேவகவுடா,தேஜாஸ்வி, சீத்தாராம் யெச்சூரி, உள்ளிட்டோர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அதில் எல்கர் பரிஷத் விவகாரத்தில் ஸ்டான் சுவாமி உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதித்த நிலையிலும், ஸ்டேன் சுவாமி விடுதலை செய்யப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பீமா கோரேகான் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
06-ஜூலை-202119:12:56 IST Report Abuse
GMM பொய் வழக்கு என்றால், இதே எதிர்க்கட்சி தலைவர்கள் விடுதலை பெற்று தரமுடியும். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொள்ளும் அளவிற்கு அவ்வளவு முக்கிய தலைவரா? எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியில் ஊழல் புகார் இல்லாததால், எதிர்காலம் பற்றி பயம் கொண்டு தடுமாறி வருகின்றன. மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கலாம்.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
06-ஜூலை-202119:08:56 IST Report Abuse
Pannadai Pandian USER NAME MUST BE SHORTER AND DECENT: COORDINATOR
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
06-ஜூலை-202118:59:38 IST Report Abuse
Desi மாவோயிஸ்ட் "சமூக ஆர்வலர்". அப்போ LeT ஹபீஸ் சயீத் குண்டு ஆர்வலரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X