விசாரணைக்கு ஆஜராக 'டுவிட்டர்' அதிகாரி நிபந்தனை

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 06, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பெங்களூரு : ''உத்தர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் முதியவர் தாக்கப்பட்ட வழக்கில், என்னை கைது செய்யப் போவது இல்லை என, உ.பி., போலீசார் உறுதி அளித்தால், 24 மணி நேரத்திற்குள் நேரில் ஆஜராக தயார்,'' என, 'டுவிட்டர் இந்தியா' நிறுவன தலைவர் மணிஷ் மகேஸ்வரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த அப்துல் சமத் என்ற முதியவரை, பல்வேறு
விசாரணை, ஆஜராக டுவிட்டர், அதிகாரி நிபந்தனை

பெங்களூரு : ''உத்தர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் முதியவர் தாக்கப்பட்ட வழக்கில், என்னை கைது செய்யப் போவது இல்லை என, உ.பி., போலீசார் உறுதி அளித்தால், 24 மணி நேரத்திற்குள் நேரில் ஆஜராக தயார்,'' என, 'டுவிட்டர் இந்தியா' நிறுவன தலைவர் மணிஷ் மகேஸ்வரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த அப்துல் சமத் என்ற முதியவரை, பல்வேறு நபர்கள் கடுமையாக தாக்கி, 'ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதரம்' என, கோஷமிட வற்புறுத்தும், 'வீடியோ' டுவிட்டர் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது.இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த, 'வீடியோ' காட்சியை நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்துக்கு உ.பி., போலீசார் அறிவுறுத்தினர்.ஆனால், காட்சிகளை நீக்க, டுவிட்டர் முதலில் மறுத்தது. பல்வேறு அழுத்தங்களுக்கு பின் காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலவரத்தை துாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், 'டுவிட்டர் இந்தியா' மீது உ.பி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள 'டுவிட்டர் இந்தியா' தலைவர் மணிஷ் மகேஸ்வரிக்கு நேரில் ஆஜராகும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.இந்நிலையில், மணிஷ் மகேஸ்வரியை கைது செய்ய, இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'என்னை கைது செய்ய மாட்டோம் என, உ.பி., போலீசார் உறுதி அளித்தால், 24 மணி நேரத்திற்குள், உ.பி.,யில் விசாரணைக்கு ஆஜராக தயார்' என, மணிஷ் மகேஸ்வரி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த உ.பி., போலீஸ் தரப்பு, 'மணிஷ் மகேஸ்வரியை கைது செய்வதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. 'டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி யார் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்தில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது விசாரணையின் ஒரு பகுதி' என, தெரிவிக்கப்பட்டது.


புதிய நியமனம் எப்போது?



மத்திய அரசின் புதிய விதிமுறையின்படி, பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, நம் நாட்டிலேயே குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்காமல், 'டுவிட்டர்' காலம் தாழ்த்தி வந்தது.டுவிட்டர் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவின் சட்ட கொள்கை இயக்குனர் ஜெரமி கெசல் என்பவரை, நம் நாட்டுக்கான குறை தீர்ப்பு அதிகாரியாக அந்நிறுவனம் நியமித்தது.

'இந்தியாவில் வசிப்பவரையே, குறை தீர்ப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்' என, புதிய விதிமுறை தெரிவிக்கிறது.மத்திய அரசின் விதிமுறைகளை டுவிட்டர் நிறுவனம் மீறியுள்ளதாக, அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'புதிய குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க, தங்கள் இஷ்டத்துக்கு கால அவகாசம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது' என, நீதிபதி தெரிவித்தார்.இதையடுத்து, டுவிட்டர் தரப்பில் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கோரப்பட்டது.அதை ஏற்க மறுத்த நீதிபதி, 'புதிய அதிகாரி எப்போது நியமிக்கப்படுவார் என்பது குறித்து நாளைய தினம், நீதிமன்றத்தில் தெளிவான பதிலை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ஓ.டி.டி., எனப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த புதிய விதிகளை எதிர்த்து, டில்லி உட்பட, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளையும், உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று மனு தாக்கல் செய்தது.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
07-ஜூலை-202114:38:22 IST Report Abuse
 N.Purushothaman டிவீட்டர் இன்னமும் நிபந்தனை போடுவதை நிறுத்தலை போல ....சிறார் சம்மந்தப்பட்ட பாலியல் வீடியோக்கள் விஷயத்தில் கூட டிவீட்டர் மேல் வழக்கு உள்ளது ....ஊருக்கு உபதேசம் பண்ணுற இடது சாரி சமூக வலைத்தளம் சிறார் விஷயத்தில் எப்படி இருக்குன்னு அதை உபயோகிப்பவர்கள் உணர்ந்தால் நல்லது
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-ஜூலை-202110:17:32 IST Report Abuse
Girija வீடியோ பொய்யோ அல்லது உண்மையோ, இந்த தகவல் கலவரத்தை தூண்டும் என்பதால் டிவிட்டர் தானாகவே தடை செய்திருக்கும் வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு எட்டப்பன் வேலை செய்து இந்தியாவில் மக்கள் ஒற்றுமை குலைக்கும், விசாரணைக்கு நிபந்தனை விதிக்கும் மனிஷை போலீஸ் அல்லது என் ஐ ஏ அடித்து துவைக்க வேண்டும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
07-ஜூலை-202108:33:03 IST Report Abuse
VENKATASUBRAMANIAN அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பட்டு விட்டது. இது தனிப்பட்ட இருவருடைய தகராறு. தலபுராணம் போன்றவர்கள் தவறாக பதிவு செய்த காரணத்தால் ட்விட்டர் பதில் சொல்ல வேண்டும். பிரியாணிக்கும் quareter க்கும் இனிமேல் எதை வேண்டுமானாலும் பதிவு செய்ய முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X