சோனியாவின் கட்டளையை நிறைவேற்றுவேன்: அமரீந்தர்

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 06, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி :பஞ்சாபில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்த, பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அமரீந்தர் சிங், ''சோனியா எந்த கட்டளை பிறப்பித்தாலும் அதை நிறைவேற்றுவேன்,'' என்றார்.பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில் முதல்வர்அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும்,
சோனியா, கட்டளை,நிறைவேற்றுவேன்: அமரீந்தர்

புதுடில்லி :பஞ்சாபில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்த, பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அமரீந்தர் சிங், ''சோனியா எந்த கட்டளை பிறப்பித்தாலும் அதை நிறைவேற்றுவேன்,'' என்றார்.பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில் முதல்வர்அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.பரஸ்பரம் இருவரும் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் மூன்று பேர் குழுவை சோனியா நியமித்தார்.கடந்த வாரம் டில்லியில் அவர்களை சந்தித்தார் அமரீந்தர் சிங். ஆனால் சோனியாவை சந்திக்கவில்லை.

இதற்கிடையே, முன்னாள் தலைவர் ராகுல், அவரது சகோதரியும், பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோரை, சித்து சமீபத்தில் டில்லியில் சந்தித்து பேசினார்.அதன்பின்னும் அமரீந்தருக்கு எதிராக சித்து தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சோனியாவை நேற்று சந்தித்து பேசினார் அமரீந்தர் சிங். இதற்காக தனி ஹெலிகாப்டரில் அவர் டில்லி வந்தார்.சோனியாவுடனான சந்திப்புக்கு முன் நிருபர்களிடம் பேசிய அவர், ''சோனியா கூறுவதை கட்டளை போல் ஏற்று செயல்படுத்துவேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
07-ஜூலை-202121:32:48 IST Report Abuse
s t rajan முன்னாள் ராணுவ அதிகாரி நீங்க ? மகன் உங்களை பார்க்க மாட்டேங்குறாரு. நீங்க அம்மா காலில் விழறீங்க. என்ன சார் ? உங்களை ஒரு தன்மானச் சிங்கம் என்று நினைத்தோம். ஆனா நீங்களும் also ran அடிமையாக இருக்கிறீர்களே Surprised n disappointed. Better compromise with Sidhdhu directly.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
07-ஜூலை-202120:42:02 IST Report Abuse
Siva சோனியாவே பாவம். விடுங்க... ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி கொஞ்சம் சந்தோஷமா இருக்கட்டும்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
07-ஜூலை-202113:23:18 IST Report Abuse
Nagarajan D அடிமைகள் வேறு என்னடா செய்ய முடியும்? உத்தரவுகளுக்கு அடிபணிவதை தவிர வேறு வழியே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X