அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் ஓட்டிய சைக்கிள் விலை என்ன?

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 07, 2021 | கருத்துகள் (81)
Share
Advertisement
சென்னை : முதல்வர் ஸ்டாலின் 4ம் தேதி மகாபலிபுரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் ஓட்டிய சைக்கிள் ரூ.81 ஆயிரத்து 500 விலை கொண்டது. இந்த 'பெடல்ஸ்' சைக்கிளை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் 'டெய்ஜோ'.சென்னை அம்பத்துாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூன்று வகை சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. இதில் 81 ஆயிரத்து 500 ரூபாய் விலை உடைய 'பெடல்ஸ் சி2' என்ற வகை
CM Stalin, cycle ride, cycling

சென்னை : முதல்வர் ஸ்டாலின் 4ம் தேதி மகாபலிபுரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் ஓட்டிய சைக்கிள் ரூ.81 ஆயிரத்து 500 விலை கொண்டது. இந்த 'பெடல்ஸ்' சைக்கிளை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் 'டெய்ஜோ'.

சென்னை அம்பத்துாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூன்று வகை சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. இதில் 81 ஆயிரத்து 500 ரூபாய் விலை உடைய 'பெடல்ஸ் சி2' என்ற வகை சைக்கிளையே முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார். 120 கிலோ எடை வரை உள்ள நபர்கள் மட்டுமே இந்த சைக்கிளை பயன்படுத்த முடியும்.


latest tamil news48 செ.மீ. நீளம் உள்ள சைக்கிளின் 'பிரேம்' அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. 7.0 ஏ.எச். 'லித்தியம் அயன் பேட்டரி' உடைய 250 வாட்ஸ் திறன் உடைய மோட்டார் இந்த சைக்கிளில் பொருத்தப் பட்டுள்ளது. ஏழு 'கியர்கள்' உடைய இந்த சைக்கிளை பெடல் செய்தால் மட்டுமே இயக்க முடியும். சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பெடல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சைக்கிளின் முன்பக்க பொருத்தப்பட்டுள்ள 'ஷாக் அப்சர்வ்ஸ் ஹைடிராலிக்' முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 'பெடல்ஸ்' செயலி வாயிலாக இந்த சைக்கிளை இயக்க முடியும். எல்.சி.டி. திரை பொருத்தப்பட்டுள்ளது. சைக்கிளின் முன்புறம் பின்புறம் 25 எல்.யு.எக்ஸ். அளவு உடைய எல்.இ.டி. 'லைட்' பொருத்தப் பட்டுள்ளது.


மக்கள் அவதி


ஸ்டாலினின் சைக்கிள் பயணம் குறித்து அக்கரை கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஷ்வரி பிரியா கூறியதாவது: கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரெல்லாம் முகக் கவசம் போடச் சொல்லி வலியுறுத்தும் முதல்வர் அன்றைய தினம் முகக் கவசம் அணியவில்லை.

காவல் துறை கூடுதல் கமிஷனர் இணை கமிஷனர், இரண்டு துணை கமிஷனர்கள், ஆறு உதவி கமிஷனர்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், 51 சப்- இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200 உள்ளூர் ஆயுதப்படை சிறப்பு பிரிவு போலீசார் வழி நெடுகிலும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் பத்தடிக்கு ஒரு போலீஸ்காரரை நிறுத்தி இருந்தனர். ஏற்கனவே காவல் துறையில் ஆள் பற்றாக்குறை இருக்கும் போது இது தேவையா. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூலை-202113:53:58 IST Report Abuse
madhavan rajan இது போல பொறுப்பில்லாமல் நடப்பவர் முதல்வர் பதவி பொறுப்பு நிறைந்தது என்று அறிக்கை வேறு விடுகிறார்
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
12-ஜூலை-202110:33:38 IST Report Abuse
Marai Nayagan ஒருத்தர் போட்டோ எடுத்து அரசியல் விளம்பரம் செய்ய மக்கள் சேவகர்களாக இருநூற் போலீஸ் அதிகாரிகள் நேரம் வீணடிப்பு. மாமல்லபுரம் கடற்கரையில் மோடி சுத்தம் செய்தபோது கிண்டலடித்து உப்பிஷ் இப்போ அப்படிஏ புளாங்கிதம் அடைவான். திராவிட குடும்ப அரசியல் திருட்டு திருவாரூரிள் திருட்டு ரயில் ஏறிய நாள் முதலே தொடங்கி இன்று வரை விடியவில்லை.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-ஜூலை-202113:32:23 IST Report Abuse
Vijay D Ratnam தகுதியே இல்லாத தற்குறி கையில் பவர் இருக்கும் போது ஒத்த பதவிக்கு இந்த குதி குதிக்கிறார்கள் சிலர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X