ஓரினத் திருமணம் செய்தவருக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 07, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்தியக் குடியுரிமை பெற்றவர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இடையேயான ஓரினத் திருமணம் செல்லுபடியாகுமா; அவருக்கு இந்தியக்குடியுரிமை வழங்க முடியுமா' என, பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அங்கீகரிப்புஓரினத் திருமணத்துக்கு நம் நாட்டு சட்டங்கள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்திய சட்டங்களின்படி,
DelhiHighCourt, SameSex Spouse, OCI, டில்லி, உயர்நீதிமன்றம், ஓரினத்திருமணம், இந்திய குடியுரிமை

புதுடில்லி: 'இந்தியக் குடியுரிமை பெற்றவர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இடையேயான ஓரினத் திருமணம் செல்லுபடியாகுமா; அவருக்கு இந்தியக்குடியுரிமை வழங்க முடியுமா' என, பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அங்கீகரிப்பு


ஓரினத் திருமணத்துக்கு நம் நாட்டு சட்டங்கள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்திய சட்டங்களின்படி, தங்கள் திருமணத்தை அங்கீகரிக்க கோரி ஓரினச் சேர்க்கையாளர்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் பணியாற்றும், ஓ.சி.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர் அந்தஸ்து பெற்றுள்ள ஜாய்தீப் சென்குப்தா, அமெரிக்காவைச் சேர்ந்த ரசல் பிளைன் ஸ்டீபன்ஸ், ஓரினத் திருமணம் செய்துள்ளனர்.


latest tamil news


தற்போது ஸ்டீபன்ஸ்க்கு, ஓ.சி.ஐ., அந்தஸ்து அளிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த 20 ஆண்டுகளாக பழகி வந்த சென்குப்தா மற்றும் ஸ்டீபன்ஸ்,ஓரினத் திருமணம் செய்துள்ளனர். அந்தத் திருமணத்தை அமெரிக்க சட்டம் அங்கீகரித்துள்ளது.தற்போது தங்கள் முதல் குழந்தை பிறப்பதற்காக இவர்கள் காத்திருக்கின்றனர்.


'நோட்டீஸ்'


latest tamil news


வெளிநாட்டவர் திருமண சட்டத்தின்படி, இந்தத் திருமணத்தை இந்திய சட்டம் ஏற்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பாலினம், பாலின உறவு பேதமில்லாமல் இந்தத் திருமணத்தை ஏற்க வேண்டும். இதை தனி மனித உரிமையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகபதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் நியூயார்க்கில் உள்ள இந்தியத் துாதரகத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
07-ஜூலை-202120:18:11 IST Report Abuse
Sivagiri இன்னும் பப்புவிடம் இருந்து டுவிட் அழுத்தம் வரவில்லையே ? . . அவருக்கு மிகவும் பிடித்தமான சட்டமாச்சே . . .
Rate this:
Cancel
sundar - ,
07-ஜூலை-202120:12:59 IST Report Abuse
sundar குழந்தையா இது என்ன புரியாத புதிர்
Rate this:
Cancel
ABDUL MALIK - Manqaf,குவைத்
07-ஜூலை-202113:57:40 IST Report Abuse
ABDUL MALIK இது முற்றிலும் தவற செயல். ஆன் பெண்ணையும் , பெண் ஆணையும் , சார்த்திருப்பதுதான் வாழ்க்கை. இதில் முரண்படுபவர்கள் மனித தன்மை இழக்கிறார்கள், பின் எவ்வாறு தனி மனித உரிமை பற்றி பேசவும், வழக்கு தொடரவும் முடியும்? இந்த போக்கு முற்றிலும் கைவிடப்படவேண்டியது. இல்லையேல், தண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X