முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 07, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி (வயது 67), தென்மேற்கு டில்லியின் வசந்த் விஹாரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். ரங்கராஜன் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்த இவர், உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்,
Former Union Minister, Rangarajan Kumaramangalam, Kitty, Wife, Murdered, Delhi, முன்னாள் மத்திய அமைச்சர், ரங்கராஜன் குமாரமங்கலம், மனைவி, கிட்டி, கொலை, டில்லி

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி (வயது 67), தென்மேற்கு டில்லியின் வசந்த் விஹாரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். ரங்கராஜன் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்த இவர், உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 06) அவரது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின்போது, கிட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கிட்டியின் வீட்டில் துணிகளை துவைத்து தரும் வேலை செய்துவந்த ராஜூ (24) தலையணையால் அழுத்தி கிட்டியை கொலை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து ராஜூவை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 'நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராஜூ மற்றும் அவரின் கூட்டாளிகள் இரண்டு பேர் உள்ளே நுழைந்து கிட்டியைத் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்தில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டுள்ளது.' எனத் தெரிவித்தனர். மேலும், ராஜூவின் இரண்டு கூட்டாளிகளைத் தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ், பா.ஜ.,விலிருந்து சேலம், திருச்சி தொகுதி எம்.பி., ஆக இருந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
07-ஜூலை-202119:14:29 IST Report Abuse
M  Ramachandran கேஜ்ரிவாலின் துப்பு கேட்ட அரசு. ஒரு நீதி பதிக்கே இந்த நிலை. அன்கு இருந்த செகுயுரிட்டி என்ன ஆனான். .
Rate this:
Mohan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-202120:35:09 IST Report Abuse
Mohan டெல்லி போலீஸ் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது...
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
07-ஜூலை-202118:43:37 IST Report Abuse
Nagarajan D முன்னாள் மந்திரி வீட்டிலே கொலை நடக்குது அப்பறம் மற்றவர்களுக்கு என்ன பாதுக்காப்பு இருக்க போகுது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
07-ஜூலை-202116:09:18 IST Report Abuse
சீனி வீட்டுவேலை செய்பவர்களின் குற்றப்பின்னணி பற்றி விசாரிக்க வேணும். வேலைக்கு வருபவர் குற்ற நடவடிக்கைகளை ஆதார் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளும் வசதி இருந்தால் இது தவிற்க்கப்படும். தனியாக வாழும் வயதானர்களுக்கு பாதுகாப்பு இல்லை, பல கயவர்கள் கொள்ளையடிக்க வேலைக்கு சேருகின்றனர். குறைந்த சம்பளத்திற்க்கு வேலைக்கு வருபவர்களை எச்சரிக்கையுடம் அணுகுவது நல்லது.
Rate this:
k.parthiban - coimbatore,இந்தியா
07-ஜூலை-202116:46:12 IST Report Abuse
k.parthibanநான் இதை பற்றி ஏற்கனவே எனது வலை பதிவில் கூறியிருந்தேன் ,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X