நீதித்துறையை அவமானப்படுத்த முயற்சி: மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 07, 2021 | கருத்துகள் (32)
Advertisement
கோல்கட்டா: பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோல்கட்டா உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த மே.வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜியை பா.ஜ.,வின்
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோல்கட்டா உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மே.வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜியை பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். இந்த வெற்றியை எதிர்த்து கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் மம்தா வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news


வழக்கு, நீதிபதி கவுசிக் சந்தா முன்பு விசாரணைக்கு வந்தது. அவருக்கு பா.ஜ., தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால், வழக்கு விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கும். வெளிப்படைத்தன்மையுடன் இருக்காது எனக்கூறி தலைமை நீதிபதிக்கு மம்தா கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்த நீதிபதி கவுசிக் சந்தா, நீதித்துறையை அவமானப்படுத்த திட்டமிட்டு மம்தா நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது செயல்கள், அரசியல்சாசனத்தில் தெரிவிக்கப்பட்ட கடமையில் இருந்து மீறியதாக கூறியதுடன், அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
07-ஜூலை-202122:15:10 IST Report Abuse
Rajas இந்த தீர்ப்பு சரியா. இன்னொரு நீதிபதி வேண்டும் என்று கேட்பது தவறா. எந்த வித விசாரணையும் இல்லாமல் எப்படி அபராதம் விதிக்கப்பட்டது என்று புரியவில்லை. ஜெயலலிதா தன்னுடைய கேசில் Retire ஆன அதே ஜட்ஜ் தான் இருக்க வேண்டும் என்று கேட்டது தனி கதை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
07-ஜூலை-202122:13:41 IST Report Abuse
Ramesh Sargam நீதி துறைக்கு இவர் பயப்படமாட்டார். மாறாக, நீதிபதிகள் இவரை கண்டால் அவ்வளவு பயப்படுகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு நீதிபதி, இவருக்கு பயந்து தன்வேலையை ராஜினாமா செய்திருப்பது உங்களுக்கு தெரியும்.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
07-ஜூலை-202121:24:07 IST Report Abuse
s t rajan நீதித் துறையை அவமானப்படுத்திய ஒரு நபர் எப்படி முதலமைச்சராகத் தொடராலாம் ? இதே ஒரு அரசு அதிகாரியா இருந்தா, வீட்டுக்கு அனுப்பிச்சிருப்பாங்களே இந்த அம்மாவால் வங்காளம் படும் அவமானம் போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X