இளமையும் அனுபவமும் கலந்த புதிய அமைச்சரவை பதவியேற்பு

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 07, 2021 | கருத்துகள் (72) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் . புதிதாக பதவி ஏற்றுக்கொண்டவர்களில் பலர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை
CabinetExpansion2021, மத்திய அமைச்சரவை, விரிவாக்கம், பிரதமர் மோடி,

புதுடில்லி: பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் . புதிதாக பதவி ஏற்றுக்கொண்டவர்களில் பலர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.


latest tamil news
இந்நிலையில், மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதில், 36 பேர் புதுமுகங்கள். 7 பேர் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்கள். அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil news

latest tamil news
பதவியேற்று கொண்ட அமைச்சர்கள் விவரம்01. நாராயண் ரானே

02. சர்பானந்தா சோனாவால்

03. விரேந்திர குமார்

04. ஜோதிராதித்யா சிந்தியா

05. ராமசந்திரா பிரசாத் சிங்

06. அஸ்வினி வைஸ்னவ்

07. பசுபதி குமார் பரஸ்

09. கிரண் ரிஜ்ஜூ

09. ராஜ்குமார் சிங்

10. ஹர்திப் சிங் புரி

11. மனுசுக் மாண்ட்வியா

12. பூபேந்தர் யாதவ்

13. பர்சோத்தம் ரூபாலா

14. கிஷன் ரெட்டி

15. அனுராக் சிங் தாகூர்

16. பங்கஜ் சவுத்ரி

17. அனுபிரியா சிங் படேல்

18. சத்யபால் சிங் பாகேல்

19. ராஜிவ் சந்திரசேகர்

20. சுஷ்ரி சோபா கரன்தல்ஜே

21. பானுபிரதாப் சிங் வர்மா

22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

23. மீனாட்சி லேகி

24. அன்புர்னா தேவி

25 நாராயஸ்வாமி

26. கவுசல் கிஷோர்

27. அஜய் பட்

28. பிஎல் வர்மா

29. அஜய் குமார்

30. சவுகான் தேவ் சிங்

31. பக்வந்த் குபா

32. கபில் மோரேஸ்வர் பாட்டீல்

33. சுஷ்ரி பிரதிமா பவுமிக்

34. சுபாஷ் சர்கார்

35. பக்வந்த் கிஷன்ராவ் காரத்

36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

37. பார்தி பிரவின் பவார்

38. பிஸ்வேஸ்வர் டுடு

39. சாந்தனு தாகூர்.

40. முஞ்சபரா மகேந்திரபாய்

41. ஜான் பர்லா

42. எல்.முருகன்

43. நிஷித் பிரமனிக் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

இதன் மூலம், மத்திய அமைச்சரவையின் பலம் 53 என்ற எண்ணிக்கையில் இருந்து 77 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர்மருத்துவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.15 பேருக்கு கேபினட் அந்தஸ்து15 பேர் மத்திய அமைச்சர்கள்,ஏழு பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 22 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஜூலை-202118:33:10 IST Report Abuse
g.s,rajan அரசை நடுத்தர மக்கள் என்றும் ஏமாற்றவே மாட்டார்கள் ,வருமான வரி உட்பட அணைத்து வரிகளையும் அரசுக்குச் செலுத்துவது நடுத்தர மக்கள் தான் ,ஏழைகளிடமும் ,பணக்காரர்களிடமும் எப்பவும் வரி வசூல் செய்யவே முடியாது ,பணம் படைத்தவர்கள் ஏதாவது தில்லுமுல்லு செய்து அரசை ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்,லாபத்தில் இயங்கினாலும் நஷ்டக்கணக்கு காண்பித்து அரசை நல்லா ஏமாத்துவானுங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
08-ஜூலை-202106:06:25 IST Report Abuse
Sai தமிழகத்தில் அருந்தியர் சமூகத்தை சேர்ந்த முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமை முருகனுக்கு கிடைத்துள்ளது. இந்த சமூகத்துக்கு ஏற்கனவே கல்வி வேலை வாய்ப்புகளில் மூன்று சதவீத உள்ஒதுக்கீடு கொடுத்துள்ளார் கலைஞர்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-202100:38:56 IST Report Abuse
Rajagopal நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். பாராட்டத் தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X