சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அத்தைக்கு மீசை முளைக்குமா?

Added : ஜூலை 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அத்தைக்கு மீசை முளைக்குமா?'இந்த மாதிரி காமெடி நிகழ்ச்சிகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியில் தான் அரங்கேறும்' என,கிண்டலடிக்கின்றனர் கர்நாடக மாநில மக்கள். இங்கு முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஆனால் அதற்குள் காங்கிரசில் நடக்கும் கூத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அடுத்த தேர்தலில்

 அக்கம் பக்கம்


அத்தைக்கு மீசை முளைக்குமா?




'இந்த மாதிரி காமெடி நிகழ்ச்சிகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியில் தான் அரங்கேறும்' என,கிண்டலடிக்கின்றனர் கர்நாடக மாநில மக்கள். இங்கு முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஆனால் அதற்குள் காங்கிரசில் நடக்கும் கூத்து பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பதில், அந்த கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே கடும் குஸ்தி நடக்கிறது. முன்னாள் முதல்வரான சித்தராமையாவின் ஆதரவாளர்கள், 'காங்கிரசில் முதல்வர் என்றாலே எங்கள் தலைவர் தான்' என, அவருக்கு முட்டுக் கொடுக்கின்றனர்.மாநில காங்., தலைவர் சிவகுமாரின் ஆதரவாளர்களோ, 'கட்சிக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது, ஆபத்பாந்தவனாக வந்து படியளப்பவர் எங்கள் தலைவர் தான்; அவருக்குத் தான் முதல்வர் பதவி' என ஆவேசப்படுகின்றனர். மூத்த தலைவரான பரமேஸ்வராவின் ஜால்ராக்களோ, 'இந்த முறை முதல்வர் பதவியை எங்கள் ஆள் விட்டுக் கொடுக்க மாட்டார்' என்கின்றனர்.
இவர்கள் தவிர எம்.பி.பாட்டீல், தன்வீர் சேட் போன்றோரும், முதல்வர் பதவிக்காக முட்டி மோதுகின்றனர். பா.ஜ.,வினரோ, 'தேர்தலில் வெற்றி பெற்றால் தானே முதல்வர் பதவிக்கு போட்டியிருக்கும்; அதற்குள் இவ்வளவு கலாட்டா நடக்கிறதே... முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம்' என, கேலி பேசுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
10-ஜூலை-202107:10:11 IST Report Abuse
NARAYANAN.V இந்தியாவில் பதவியை நிர்ணயிப்பது பணம்தான் என்ற க்ரைடீரியா வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சே.பின்னர் என்ன முதல்வர் யார் என்பதை அந்தப் பணம்தான் நிர்ணயிக்கும்.இப்போது மோதிக் கொள்ளும் தலைவர்கள் எல்லோரும் தேர்தல்வரை செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே.அந்தப் பணத்தை முடிந்த மட்டும் சேர்க்க வேண்டியது ஒன்றே.ரேஸ் ஆரம்பமாகட்டும்.யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை தேர்தலுக்குப் பின் பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X