புதுடில்லி : புதிதாக விஸ்தரிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில், 50 வயதுக்கும் குறைவானவர்கள், 14 பேரும், பெண்கள், 11 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 27 பேரும், எஸ்.சி., வகுப்பை சேர்ந்தவர்கள், 12 பேரும், எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்கள், 8 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர்.
புதிதாக விஸ்தரிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில், ஜாதி, மதம் மற்றும் நிர்வாக அனுபவங்களின் அடிப்படையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில், 46 பேர், மத்திய அரசு அனுபவம் வாய்ந்தவர்கள், நான்கு பேர் முன்னாள் முதல்வர்கள், 18 பேர், மாநில அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள்.இவர்களை தவிர, வழக்கறிஞர்கள், 13 பேர், டாக்டர்கள், ஆறு பேர், பொறியாளர்கள், ஐந்து பேர், குடிமைப் பணியாளர்கள், ஏழு பேர், முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஏழு பேர், வர்த்தக படிப்பில் பட்டம் பெற்றவர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், ஒன்பது மாநிலங்களை சேர்ந்த, 11 பெண்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பீஹார், ம.பி., உ.பி., மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழகத்தை சேர்ந்த 12 பேர், எஸ்.சி., வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்களில், இரண்டு பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.எஸ்.டி., வகுப்பை சேர்ந்த, 8 பேரில், மூவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த, 27 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், 5 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
விஸ்தரிக்கப்பட்ட அமைச்சரவையில், 14 பேர், 50 வயதுக்கும் குறைவானவர்கள். மேலும், முஸ்லிம், சீக்கிய மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த தலா, ஒருவருக்கும், பவுத்த மதத்தை சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE