'சீனியர்கள்' ராஜினாமா ஏன்?

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 07, 2021 | கருத்துகள் (20) | |
Advertisement
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டது. ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால் போன்றோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது தெரிந்தாலும், எத்தனை பேருக்கு, யார் யாருக்கு பதவி கிடைக்கும் என்பது ரகசியமாகவே இருந்தது.ஆனால், யாரும் எதிர்பாராதது, 12 'சீனியர்' அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுதான். குறிப்பாக, சுகாதார அமைச்சர், ஹர்ஷ் வர்தன், செய்தி -
'சீனியர்கள்' ராஜினாமா ஏன்?

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டது. ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால் போன்றோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது தெரிந்தாலும், எத்தனை பேருக்கு, யார் யாருக்கு பதவி கிடைக்கும் என்பது ரகசியமாகவே இருந்தது.ஆனால், யாரும் எதிர்பாராதது, 12 'சீனியர்' அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுதான். குறிப்பாக, சுகாதார அமைச்சர், ஹர்ஷ் வர்தன், செய்தி - ஒலிபரப்பு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் ராஜினாமா செய்தது, சக அமைச்சர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையை சரியாக எதிர்கொள்ளவில்லை என, ஹர்ஷ்வர்தனுக்கு எதிராக கூறப்படுகிறது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் தொடர்பாக, 'டுவிட்டர்' சமூக வலைதளத்துடன் மோதல், ரவி சங்கர் பிரசாத் வெளியேற்றத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.
கல்வி அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார். அதனால், உடல்நிலை காரணமாக கூறப்படுகிறது.
கடந்த, இரண்டு மாதங்களாக, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, மோடி ஆய்வு செய்தார். அதில், இந்த குறிப்பிட்ட அமைச்சர்களின் செயல்பாட்டில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என, கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் இதையே கூறியது.

அதோடு, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது, பிரதமர், மோடியின் விருப்பமாக இருந்தது. இதையடுத்து, மோடி இந்த அதிரடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில் இருந்தபோது, மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள, இந்த, 12 பேருக்கும், கட்சிப் பணி அல்லது மாநில சட்டசபை தேர்தல் பணிகள் கொடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
08-ஜூலை-202120:01:51 IST Report Abuse
enkeyem பாவம் உ பி க்கள். இன்று கதறல் அதிகமாகவே உள்ளது.. இன்று ராஜினாமா செய்துள்ள அமைச்சர்கள் இளையவர்களுக்கு வழிவிட்டு உள்ளார்கள்.. அதில் ரவிசங்கர் பிரசாத் உட்பட பலர் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூலை-202119:38:06 IST Report Abuse
J.V. Iyer சரியாக வேலை செய்யாத கடைசி பத்து விழுக்காட்டினரை ஓரம் கட்டியதில் பாஜக தனது அரசியல் சாணக்யத்தை காட்டுகிறது. நல்ல மத்திய அரசு ஏழு ஆண்டுகளாக நாட்டை ஆள்கிறது. தமிழகத்தை எந்த சூனியம் ஆண்டால் என்ன?
Rate this:
Cancel
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
08-ஜூலை-202113:41:23 IST Report Abuse
Naam thamilar ரயில் என்ஜின் பழுது பட்டிருக்கும் பொது என்ஜின் யை சரி செய்யாமல் பின்னால் இருக்கும் பெட்டியை மாற்றி என்ன பயன். பகோடா பாய்ஸ் புரியவை மாட்டங்குது
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08-ஜூலை-202122:26:08 IST Report Abuse
கல்யாணராமன் சு.ஆஸ்திரேலியாவிலே முரசொலி கிடைக்குதா, தவறாமே படிக்கிறீங்களா ????...
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
12-ஜூலை-202116:47:47 IST Report Abuse
Naam thamilarதுக்ளக் கிடைக்கிறதாம் . வந்து படிக்கிறியா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X