நந்திகிராம் வழக்கில் மம்தாவுக்கு நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 07, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோல்கட்டா :நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி பெற்ற வெற்றிக்கு எதிராக, முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து, கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கவுசிக் சந்தா நேற்று விலகினார். ஆனால், வழக்கு தொடர்ந்த மம்தாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி
முதல்வர் மம்தா, நீதிமன்றம் அபராதம் ரூ.5 லட்சம்!

கோல்கட்டா :நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி பெற்ற வெற்றிக்கு எதிராக, முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து, கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கவுசிக் சந்தா நேற்று விலகினார். ஆனால், வழக்கு தொடர்ந்த மம்தாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர்சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.


அவரின் சவாலை ஏற்று, முதல்வர் மம்தா, தன் பவானிபூர் தொகுதியை விட்டுவிட்டு, நந்திகிராம் தொகுதியில், சுவேந்து அதிகாரியை எதிர்த்து களம் கண்டார்.எனினும் அந்த தேர்தலில், கடும் போட்டிக்குப் பின், முதல்வர் மம்தா 1,956 ஓட்டுகள் வித்தியாசத்தில், சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவினார். இதனால், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலை சந்தித்து, எம்.எல்.ஏ.,வாக தேர்வாகவேண்டிய நிலை மம்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, நந்திகிராம் தொகுதியில், சுவேந்து அதிகாரி பெற்ற வெற்றியை எதிர்த்து, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மம்தா முறையிட்டார்.


கட்சியினர் எதிர்ப்பு



இந்த மனு, நீதிபதி கவுசிக் சந்தா அமர்வு முன் பட்டியலிடப்பட்டது.பின், நீதிபதி சந்தா, பா.ஜ.,வின் சட்டப் பிரிவை சேர்ந்தவர் எனக்கூறி, அந்த வழக்கை அவர் விசாரிக்க, திரிணமுல் காங்., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, முதல்வர் மம்தா கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
நீதிபதி சந்தா, பா.ஜ., தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார். 2015ல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படும் வரை, நீதிபதி சந்தா, பா.ஜ.,வில் உறுப்பினராக இருந்து
வந்தார்.

அவர் இந்த வழக்கை விசாரித்தால், இதன் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருக்கும். விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்காது. எனவே இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் இருந்து விலகுவதாக, நீதிபதி கவுசிக் சந்தா அறிவித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:என் மீது, ஒருதலைப்பட்சமாக செயல்படுவேன் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நான் நீதிபதியாக பதவியேற்கும்போது, விருப்பு வெறுப்பு இன்றி, என் கடமையை முறையாக செய்வேன் என உறுதிமொழி ஏற்றேன்.


தயக்கம் இல்லை



இந்த வழக்கை விசாரிக்க எனக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. அதேபோல், இதை விசாரிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை.எனினும், என்னால் சர்ச்சைகள் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன்.
ஒரு நீதிபதி குறித்து, அவதுாறான கருத்துகளை தெரிவித்த மனுதாரர் முதல்வர் மம்தாவுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை அவர் இரண்டு வாரங்களுக்குள், மாநில பார் கவுன்சிலிடம், 'டிபாசிட்' செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
08-ஜூலை-202119:56:25 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த நீதிபதிதான் வழக்கு விசாரணையில் இருந்து ஒதுங்கி விட்டாரே. அப்புறம் எப்படி அபராதம் விதிக்க முடியும்? இதற்கெல்லாம் மம்தாஜி பயப்பட மாட்டார். இதோ மம்தா அவர்களினன் தீர்ப்பு : ர் ஐந்து லட்சத்தையும் இந்த நீதிபதியே கட்ட வேண்டும் என்பது எனது கட்டளை. என் கட்டளையே சாசனம்.
Rate this:
Cancel
08-ஜூலை-202114:09:36 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இந்த தீதி யும்தான் அப்பப்போ இப்படி நாக்கை பு டு ங் கி கிர மாதிரி கேக்குது ... ம்ம்... ஆனால் என்ன செய்யறது எதுக்கும் அசரற மாதிரி இல்லை..
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
08-ஜூலை-202114:08:09 IST Report Abuse
Dhurvesh பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சிக்கு பதிலாக பெட்ரோல் கீ பாத் என்ற நிகழ்ச்சியை நடத்தலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X