தமிழக பா.ஜ., தலைவர் யார்?

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: தமிழக பா.ஜ., தலைவராக உள்ள முருகன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், புதிய தலைவராக, நயினார் நாகேந்திரன் அல்லது அண்ணாமலை நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, 2019 இறுதியில், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பின், புதிய தலைவராக எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என, பலரது
TN_BJP, Annamalai, Nainar Nagendran

சென்னை: தமிழக பா.ஜ., தலைவராக உள்ள முருகன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், புதிய தலைவராக, நயினார் நாகேந்திரன் அல்லது அண்ணாமலை நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, 2019 இறுதியில், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பின், புதிய தலைவராக எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என, பலரது பெயர்கள் கூறப்பட்டன.

அக்கட்சியினர் எதிர்பாராத வகையில், தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய துணை தலைவராக இருந்த முருகன், தமிழக பா.ஜ., தலைவராக, 2020 மார்ச்சில் நியமிக்கப்பட்டார். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் வெற்றி பெற்றது.


latest tamil news



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளவும், கட்சியை பலப்படுத்தவும், தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு, தேசிய தலைமை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் முருகன் நேற்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.இதையடுத்து, தமிழக பா.ஜ.,வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். அந்த பதவிக்கு, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அண்ணாமலையை நியமிக்கலாமா அல்லது திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனை நியமிக்கலாமா என, தேசிய தலைமை ஆலோசித்து வருகிறது. விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூலை-202119:33:44 IST Report Abuse
J.V. Iyer இரண்டில் யார் வந்தாலும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெறும்.
Rate this:
SUNDARASIVAM S - baghram,இந்தியா
12-ஜூலை-202111:56:22 IST Report Abuse
SUNDARASIVAM Sகனவு காண்பதற்கு கட்டுப்பாடு கிடையாது...
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
08-ஜூலை-202118:01:39 IST Report Abuse
Sai காலங்காலமா பிஜேபிக்காக ஒழைச்சு ஓடா தேய்ந்த இல பொன் வாணாத்தி ராகவன் நாராயணன் குசுபு எல்லாம் நோ யூசா?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஜூலை-202119:03:39 IST Report Abuse
தமிழவேல் இது புது ரத்தமாம்......
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
08-ஜூலை-202110:04:49 IST Report Abuse
 N.Purushothaman திருட்டு திராவிட வியாபாரிகள் மாதிரி செயல் தலைவர், செயல்பட முடியாத தலைவர், விடியல் தலைவருன்னு புசு புட்சா பேரை கொடுத்து கோபாலபுரம் கோஷ்டிக்கே அத்தனையும் தாரை வார்ப்பது இல்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X