சென்னை:பல மாதங்களாக, மின் வாரியத்திற்கு நிலுவை வைத்துள்ள, 2,750 கோடி ரூபாய் மின் கட்டணத்தை விரைந்து செலுத்துமாறு, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி துறைகளை, தமிழக அரசின் நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான, மின் வாரியம் மட்டும் மேற்கொள்கிறது. பொது மக்கள், தனியார், மின்கட்டணத்தை சரியாக செலுத்தும் நிலையில், அரசு துறைகள் செலுத்துவதில்லை.
மத்திய அரசு, அரசு துறைகள்மற்றும் அரசு நிறுவனங்களாக இருந்தாலும், குறித்த தேதியில் மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், மின் வினியோகத்தை துண்டிக்குமாறு, மாநில மின் வாரியங்களை அறிவுறுத்திஉள்ளது.
தற்போது, ஊராட்சிகள், 640 கோடி ரூபாய்; பேரூராட்சிகள், 40 கோடி ரூபாய்; நகராட்சிகள், 160 கோடி ரூபாய்; மாநகராட்சிகள், 410 கோடி ரூபாய் என, உள்ளாட்சி அமைப்புகள், 1,250 கோடி ரூபாயும்; குடிநீர் வாரியம், 1,500 கோடி ரூபாயும் மின் கட்டணம் செலுத்தாமல், தமிழக மின் வாரியத்திற்கு நிலுவை வைத்துள்ளன. இது, ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள மின் வாரியத்திற்கு, மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2,750 கோடி ரூபாய் மின் கட்டண நிலுவை தொகையை விரைந்து செலுத்துமாறு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆகியவற்றை, தமிழக அரசின் நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. மின் கட்டணம் செலுத்தாமல், தமிழக மின் வாரியத்திற்கு நிலுவை வைத்துள்ளன. இது, ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள மின் வாரியத்திற்கு, மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2,750 கோடி ரூபாய் மின் கட்டண நிலுவை தொகையை விரைந்து செலுத்துமாறு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆகியவற்றை, தமிழக அரசின் நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது.