மத்திய அமைச்சரவைக்கு புது ரத்தம்! | Dinamalar

மத்திய அமைச்சரவைக்கு புது ரத்தம்!

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (28)
Share
புதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு இரண்டாவது முறையாக அமைந்த பிறகு, முதல் முறையாக அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில், பல புதுமுகங்கள், இளம் வயதினருக்கு அமைச்சர் பதவி கொடுத்து, மோடி கவுரவித்துள்ளார். மூப்பு, உடல்நிலை கோளாறு, சரியாக செயல்படாதது ஆகிய காரணங்களால், 12 பேர் பதவியை இழந்துள்ளனர். நேற்று
மத்திய அமைச்சரவைக்கு  புது ரத்தம்!

புதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு இரண்டாவது முறையாக அமைந்த பிறகு, முதல் முறையாக அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில், பல புதுமுகங்கள், இளம் வயதினருக்கு அமைச்சர் பதவி கொடுத்து, மோடி கவுரவித்துள்ளார்.

மூப்பு, உடல்நிலை கோளாறு, சரியாக செயல்படாதது ஆகிய காரணங்களால், 12 பேர் பதவியை இழந்துள்ளனர். நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், 43 பேருக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தின் வாயிலாக, அடுத்தாண்டு நடக்கும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தனது ஆட்டத்தை மோடி துவக்கியுள்ளார்.கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பெற்று, பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அவருடைய அமைச்சரவையில், 57 பேர் இடம் பெற்றிருந்தனர்.


நடவடிக்கைகடந்த, 2014 - 2019ல் தன் முதல் ஆட்சி காலத்தில், மூன்று முறை அமைச்சரவையை மாற்றியமைத்தார் மோடி. ஆனால், இரண்டாவது முறை பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அமைச்சரவையில் எந்த மாற்றமோ, விரிவாக்கமோ நடத்தப்படாமல் இருந்தது.இந்த அரசில், 81 பேர் வரை அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற நிலையில், கடந்தாண்டு மார்ச் முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என, கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.


விலகல்கடந்த 2014 மே மாதத்தில் அமைந்த முதல் அமைச்சரவையில், 23 'கேபினட்' அமைச்சர்கள்; 22 இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் என, 45 பேர் இடம்பெற்றிருந்தனர். அந்தாண்டு நவம்பரில் மேலும் 21 பேர் சேர்க்கப்பட்டு, அமைச்சர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது.கடந்த, 2016 ஜூலையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பலர் நீக்கப்பட்டு, 12க்கும் மேற்பட்டோர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

அதையடுத்து, அமைச்சர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்தது.ஆனால், இரண்டாவது ஆட்சி காலத்தில், இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2019 நவம்பரில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது.அதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் இருந்த கனரக தொழில்கள், பொது நிறுவனங்கள் அமைச்சகங்கள், பிரகாஷ் ஜாவடேகருக்கு வழங்கப்பட்டது. அதையடுத்து அமைச்சர்கள் எண்ணிக்கை, 56 ஆக குறைந்தது. இதை தவிர எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பதவி உயர்வுமத்திய அரசில், 52 அமைச்சகங்களும்,இரண்டு துறைகளும் உள்ளன. விண்வெளி மற்றும் அணு சக்தி ஆகிய அந்த இரண்டு துறைகளும், பிரதமரின் கீழ் உள்ளன. இதை தவிர, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம், பிரதமரிடம் உள்ளது.அதன்படி, 51 அமைச்சகங்களை, அமைச்சர்கள் கவனிக்க வேண்டியதாயுள்ளது. கேபினட் அந்தஸ்துள்ள, 23 அமைச்சர்களில் பலரிடம், இரண்டு அல்லது மூன்று அமைச்சகங்கள் உள்ளன. அதேபோல், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் சிலரிடமும், இரண்டுக்கு மேற்பட்ட அமைச்சகங்கள் உள்ளன.இந்நிலையில், கட்சியில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்தோர், கடந்த சில ஆண்டுகளில் மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தற்போது மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.பிரகாஷ் ஜாவடேகர், ரவிசங்கர் பிரசாத் உட்பட, 12 பேர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். நேற்று பதவியேற்ற, 43 பேரில், 36 பேர் புதுமுகங்கள்; ஏழு இணையமைச்சர்கள், 'கேபினட்' அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


வாய்ப்புபதவியேற்றவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வயதினர். சுதந்திரத்திற்கு பின், மிகவும் இளமையான அமைச்சரவையாக, புதிய அமைச்சரவை அமைந்துஉள்ளது. பல இளம் தலைவர்கள், புதுமுகங்களுக்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும், இந்த மாற்றம் அமைந்துள்ளது.எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு தற்போது அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களும் அதிகளவில் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன், 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையிலும், இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், தன் ஆட்டத்தை, மோடி துவக்கிஉள்ளார்.


latest tamil newslatest tamil news


Advertisement


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newsவளர்ச்சிக்கான அரசு!புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர், நரேந்திர மோடி, சமூக வலை தளத்தில், செய்தி வெளியிட்டுள்ளார்.வளர்ச்சிச்கான அரசு என்ற,' ஹேஷ்டேக்' எனப்படும் தலைப்புடன் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களுக்கு, அவர்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். நாட்டு மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் தொடர்ந்து செயல்படுவோம். அதன் மூலம், மிகவும் வலுவான, வளர்ச்சியுள்ள இந்தியாவை உருவாக்குவோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், இன்று மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X