எத்தனையோ பேர் காத்திருக்க... விரயமாகின்றன சக்கர நாற்காலிகள்!

Added : ஜூலை 08, 2021 | |
Advertisement
கோவை : கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் துறையில் சக்கர நாற்காலிகள் யாருக்கும் பயனின்றி, போதிய பராமரிப்பு இல்லாமல் போடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில், நலத்துறை அலுவலகத்தின் ஒரு பக்கத்தில், சக்கர நாற்காலிகள் பயன்பாடும், பராமரிப்பும் இன்றி

கோவை : கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் துறையில் சக்கர நாற்காலிகள் யாருக்கும் பயனின்றி, போதிய பராமரிப்பு இல்லாமல் போடப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில், நலத்துறை அலுவலகத்தின் ஒரு பக்கத்தில், சக்கர நாற்காலிகள் பயன்பாடும், பராமரிப்பும் இன்றி போடப்பட்டுள்ளன.இதுகுறித்து, மாற்றுத் திறனாளி ஒருவர் கூறுகையில், 'பத்து சக்கர நாற்காலிகள் பராமரிப்பு இல்லாமல் போடப் பட்டுள்ளது. அதன் தரம் நன்றாகவே உள்ளது. இதனை வெட்டவெளியில் போட்டுள்ளதால், மழை, வெயிலால் பயன்பாடு இல்லாமல் போகும்.இதன் ஒவ்வொன்றின் மதிப்பும், 6,000 ரூபாய் இருக்கும்.

பலர் இதனை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இங்கு, அதன் மதிப்பு தெரியாமல் அலட்சியமாக போட்டுள்ளனர்' என்றார்.இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி வசந்த் ராம்குமாரிடம் கேட்டபோது, '' சர்வீஸ் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் சிறிய சக்கரம் போன்ற சில பாகங்கள், இங்கு கிடைக்காது. சர்வீஸ் செய்து பயன்படுத்தப்படும்,'' என்றார்.பயன்படுத்துங்க...அதுவரை பாதுகாப்பாக வையுங்க சார்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X