பெண்ணையாறு அணை இடிக்க கோரி வழக்கு?

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | |
Advertisement
சென்னை:பெண்ணையாறு அணையை இடிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்த தீவிர ஆலோசனையில், நீர்வளத் துறை அதிகாரிகள் இறங்கிஉள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாறு வாயிலாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலுார் ஆகிய மாவட்டங்கள் பாசனம், குடிநீர் வசதி பெறுகின்றன.தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றி லும்,
 பெண்ணையாறு, அணை, வழக்கு?

சென்னை:பெண்ணையாறு அணையை இடிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்த தீவிர ஆலோசனையில், நீர்வளத் துறை அதிகாரிகள் இறங்கிஉள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாறு வாயிலாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலுார் ஆகிய மாவட்டங்கள் பாசனம், குடிநீர் வசதி பெறுகின்றன.

தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றி லும், அதன் கிளை ஆறுகளிலும் நீரை சேமிப்பதற்கான கட்டமைப்புகளை கர்நாடக அரசு ஏற்படுத்தக் கூடாது. ஆனால், பெண்ணையாற்றுக்கு நீர் வரும் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே புதிய அணையை, ஒப்பந்த விதியை மீறி சட்டவிரோதமாக கர்நாடகா கட்டி உள்ளது.இதனால், தமிழகத்திற்கு பெண்ணையாற்று நீர்வரத்து குறையும் வாய்ப்புள்ளது.


latest tamil news



கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., மற்றும் திருவண்ணாமலை, சாத்தனுார் அணைகள் பாதிக்கப்படும். எனவே, கர்நாடகா கட்டிய சட்டவிரோத அணையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமீபத்தில் டில்லி சென்ற தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து, இப்பிரச்னையை தீர்க்க வலியுறுத்தினார்.

இதற்கிடையே, தமிழக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்று, அணையை இடிக்க வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இது குறித்த தீவிர ஆலோசனையில், நீர்வளத் துறை, காவிரி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், அரசு வக்கீல்கள் இறங்கிஉள்ளனர். இது குறித்த விபரங்கள், இன்று முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X