பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் பசுக்களை 'சும்மா' கொடுப்பதேன்?

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் கோசாலைக்கு,பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பசுக்கள், இலவசமாக பிறருக்கு வழங்கப்பட்டது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த 4ம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடந்த விழாவில், கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவும், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டியும், கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, பசுக்களை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஸ்ரீரங்கம்
 கோவில் பசுக்களை 'சும்மா' கொடுப்பதேன்?

ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் கோசாலைக்கு,பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பசுக்கள், இலவசமாக பிறருக்கு வழங்கப்பட்டது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த 4ம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடந்த விழாவில், கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவும், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டியும், கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, பசுக்களை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக, ஸ்ரீரங்கம் ரங்கராஜன்நரசிம்மன் கூறியதாவது:அறநிலையத் துறையின் எந்த விதியின் கீழ், இப்படி கோசாலைக்கு வந்த பசுக்களை இலவசமாக கொடுக்கின்றனர் என்று தெரிய வில்லை. 'உபரியாக' உள்ள பசுக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக, அறிவிப்புப் பலகை சொல்கிறது. கோசாலையில், எத்தனை பசுக்களை வைத்துப் பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியவில்லை.

விழா நடந்த அன்று மட்டும், 45 பசுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.பல ஆண்டுகளாக, ஒவ்வொரு பெரிய கோவிலிலும் உள்ள பசுக்களை, இப்படி இலவசமாக கொடுப்பதாகத் தெரிகிறது. கடந்த 2012ல் மட்டும், திருச்செந்துார் முருகன் கோவிலில், 6,000 பசுக்கள் இப்படி கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் கோவிலிலும், இதே நடைமுறை இருந்து வருகிறது.

இவை அனைத்தும் அடிமாடுகளாக விற்பனை செய்யப்படுமே அன்றி, பேணிப் பாதுகாக்கப்படுவதற்கான ஆதாரம் ஏது?ஸ்ரீரங்கம் விழாவில், சட்டசபை உறுப்பினரும், இணை ஆணையர் மாரிமுத்துவும் பங்கேற்று உள்ளனர்.பக்தர்கள் அன்போடும், நம்பிக்கையோடும் வழங்கும் பசுக்களை, இப்படி விலையில்லாமல் வழங்குவது எதற்காக? இதற்கான அனுமதியை, எந்த அறநிலையத் துறைச் சட்ட விதி வழங்குகிறது?இவ்வாறு ரங்கராஜன் நரசிம்மன் கூறினார்


- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy - Erfelden Reidstadt,ஜெர்மனி
08-ஜூலை-202122:13:42 IST Report Abuse
Ramamoorthy பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து தானம் தரப்பட்ட பசுக்களை இளம் கன்றுகளுடனும் கூட அப்போதைய அறநிலைய துணை கமிசநர் அமுதாவோ கவிதாவோ கசாப்பு வியாபாரிகளுக்கு விற்று அவை முகத்தில் யூரியா சாக்கு மூடி மயங்கிய நிலையில் தட்டு வண்டியில் வைக்கோல் போட்டு மூடி சுடுகாட்ட்டில் வைத்து கொடூரமாக அறுக்கப்பட்டு தலையை நாய்கள் குதறும் காட்சியையும் ஸ்பெஷல் ரிப்போர்ட் ஆக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டது. பின்னர் கம்பரசம்பேட்டையில் வைத்து லாரியில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பினார்.மஹா பாவிகளே தயவு செய்து மேற்படி பசு எருது எருமை எதுவாக இருந்தாலும் மயிலாடுதுறையிலுள்ள ஸ்ரீ ஜெயம் கோசாலைக்கு அனுப்பி விடுங்கள்.இறக்கும் வரை தங்கள் சொந்த செலவில் அன்புடன் காப்பாற்றுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் பொய் பார்க்கலாம்.அவர்கள் கடவுள் அனுப்பி வைத்த மனிதர்கள் . பழனியில் கோசாலைக்காக சுமார் 200 ஏக்கர் நிலம் தானம் தரப்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால் அதே பழனியிலிருந்து தான் முருகனுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவுக்கு அனுப்பப்படுவதாகவும் அறிகிறேன் . ஆறாம் இலாத்யா துறையோ தமிழக பிஜேபியோ ஆவண செய்ய வேண்டுகிறேன் ராம மூர்த்தி 94442 39442
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
08-ஜூலை-202120:41:23 IST Report Abuse
krish அர்ச்சகர்களுக்கு/கோயில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாடுகளை, அவர்கள் அடிமாடுகளாக தாரை வார்த்துவிடுவார்கள் என்று நினைப்பது அபத்தம். மேலும் கறவை மாடுகளையே பக்தர்கள் தானமாக கோயிலுக்கு வழங்குவார்கள். அவை கறக்காத மாடுகள் என்று ஏன் எண்ண வேண்டும். மேலும் கோயில்களினால் பசுக்களை பராமரிக்க முடியாவிட்டால், ,அன்றாடம் கோயில் ஊழியம் செய்துவரும் , கோயிலில் இறைவனுக்கு கைங்கர்யம் செய்ய பரம்பரையாக/ பல தலைமுறையாக, தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணம் செய்து வருகின்ற பரம்பரை அர்ச்சக அந்தணர்களுக்கு, பிற கைங்கர்ய பரர்களுக்கு /இறை பணியாளர்களுக்கு, அவற்றை, தானமாக, ஓக்கவூதியமாக, பசுக்களை நேசத்துடன், பாசத்துடன் பராமரிக்கும் வகையில் வழங்கினால், பக்தர்கள் அதை வரவேற்கவே முற்படுவர், குறை காணமாட்டார்கள். எதிலும் குறை காணும் நோக்கத்துடன், செயல்களின் நன்மை தீமை பாராமல், குற்றம் சுமத்துவதையே கொள்கையாக கொண்டவர்களை, இறைவன் மன்னித்து அருள்புரிவானாக.
Rate this:
Cancel
Ramasamy - chennai,இந்தியா
08-ஜூலை-202116:00:05 IST Report Abuse
Ramasamy I want to ask one question to the person . If the Cow is not giving milk they are throwing it away from the present set up. Fine, If their parents became old and not capable of doing any job or not earning any penny will they show the door to them ? Or they are guiding us to adopt. ( Every one has do like that? ). Since COW cannot speak they taking it granted to do any ultravires act against that . Thanks to Dinamalar for expressing people's view .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X