அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருக்குவளை கோவிலில் ஸ்டாலின் தரிசனம்

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
நாகப்பட்டினம் : தன் தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை வந்த முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.முதல்வராக பொறுப்பேற்ற பின், தன் தந்தை கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம், திருக்குவளைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வந்தார். குடும்பத்தினரோடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் தரிசனம் செய்தார்.கோவிலில் இருந்து நடந்தே,
 திருக்குவளை கோவிலில் ஸ்டாலின் சுவாமி தரிசனம்

நாகப்பட்டினம் : தன் தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை வந்த முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின், தன் தந்தை கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம், திருக்குவளைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வந்தார். குடும்பத்தினரோடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் தரிசனம் செய்தார்.

கோவிலில் இருந்து நடந்தே, கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்த அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலி மாறன், கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பழமையான புகைப்பட தொகுப்புகளை பார்வையிட்டார். தன் குடும்பத்தினரின் சிறு வயது புகைப்படங்களின் தொகுப்பை, மகன் மற்றும் பேரக் குழந்தைகளிடம் விளக்கினார்.

அங்கிருந்த பதிவேட்டில், 'முதல்வர் பதவியை, பதவியாக கருதாமல் பொறுப்பு என கருதி, என் பயணம் தொடரும்' என எழுதி கையெழுத்திட்டார்.பின், தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, சீராவட்டம் பகுதியில் வெண்ணாறு வடிகால் வாய்க்காலில் நடக்கும் துார்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-202123:40:03 IST Report Abuse
Aanandh கள்ளத்தனம், கபடம், கவிழ்ப்பு என்பதை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையின் மாற்று என்று கடைப்பிடி த்து, திருட்டு ரயிலேறி வந்து, தலைமைப்பதவியை கபடமாக அபகரித்து, புரட்சி தலைவரின் ஆட்சி கவிழ்ப்பையே உயிர்மூ ச்சாகக் கொண்டு, ஊரைக்கொள்ளையடித்து உலகப்பணக்காரர்கள் வரிசையில் உச்ச இடம் பெற்ற ஆளின் நினைவு இல்ல ம் சந்ததிகளுக்கு சரணாலயம். பதினைந்து தலைமுறைகளும் படுத்துக்கொன்டே அனுபவிக்கலாம். தொண்டர்கள் துண் டை (மிஞ்சி இருந்தால்) தலையில் போட்டுக்கொண்டு தடுமாறலாம்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
14-ஜூலை-202121:26:13 IST Report Abuse
bal எவ்வளவு சிலைகள் உள்ளன என்று கணக்கெடுப்பா
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
13-ஜூலை-202117:20:02 IST Report Abuse
dina இவங்க முன்னோடிகள் அடித்த கொள்ளையில்தான் வண்டி ஓடுகிறது என்று குடும்பத்துடன் காண்பித்து மேலும் அன்னிவரையும் இதே வழியில் சந்ததியினரும் நடக்க உறுதிமொழியும் எடுக்கப்பட்டது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X