நேர்மையான வி.ஏ.ஓ.,வுக்கு பிறந்த நாள் கொண்டாடிய மக்கள்

Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (14)
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, மக்கள் பணிகளை சிறப்பாக செய்து வரும் வி.ஏ.ஓ., பிறந்த நாளை, கிராம மக்கள் பரிசு வழங்கி கொண்டாடினர். தஞ்சாவூர் அடுத்த வல்லம் புதுார் வி.ஏ.ஓ., செந்தில்குமார், 46; மனைவி கோமதி; ஆசிரியை. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடற்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற செந்தில்குமார், 2015ல், தஞ்சாவூர் விளார் பகுதி வி.ஏ.ஓ., வாக பணியில் சேர்ந்தார். 2018ல், வல்லம் புதுார்
 நேர்மை,வி.ஏ.ஓ.,வுக்கு பிறந்த நாள் கொண்டாடிய மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, மக்கள் பணிகளை சிறப்பாக செய்து வரும் வி.ஏ.ஓ., பிறந்த நாளை, கிராம மக்கள் பரிசு வழங்கி கொண்டாடினர். தஞ்சாவூர் அடுத்த வல்லம் புதுார் வி.ஏ.ஓ., செந்தில்குமார், 46; மனைவி கோமதி; ஆசிரியை. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடற்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற செந்தில்குமார், 2015ல், தஞ்சாவூர் விளார் பகுதி வி.ஏ.ஓ., வாக பணியில் சேர்ந்தார். 2018ல், வல்லம் புதுார் பகுதிக்கு மாறுதலாகி பணியாற்றி வருகிறார்.
வல்லம்புதுார், முன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி என மூன்று பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை அலைக்கழிப்பு செய்யாமலும், லஞ்சம்
வாங்காமலும் செய்து வருகிறார். 'கஜா' புயல், கொரோனா பொது முடக்க காலத்தில், கஷ்டப்பட்டவர்களுக்கு, சொந்த செலவில் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார். ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு அரிசி வழங்கி வருகிறார். இதனால், செந்தில்குமார் மீது கிராம மக்கள் அதிக மரியாதை கொண்டுள்ளனர்.
இதை பாராட்டும் விதமாக, அவரது பிறந்த நாளான நேற்று, குருவாடிப்பட்டி கிராம மக்கள், கேக் வெட்டி நினைவு பரிசுகள் வழங்கினர். பெண்கள், கும்மியடித்து பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டனர்.கிராம மக்கள் கூறுகையில், 'இப்படி ஒரு வி.ஏ.ஓ.,வை இதுவரை பார்த்தது இல்லை.லஞ்சம் வாங்காமல் மக்கள் பணியாற்றும் அவரது செயல்பாடுகளால், பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்றுள்ளோம்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
12-ஜூலை-202112:37:31 IST Report Abuse
ganapati sb நேர்மையாளரான கிராம அதிகரிக்கும் அதை அங்கீகரித்த கிராம மக்களுக்கும் பாராட்டுக்கள் தேசமெங்கும் நேர்மை பரவட்டும்
Rate this:
Cancel
perumal - Arakkonam,இந்தியா
09-ஜூலை-202116:43:58 IST Report Abuse
perumal மேற்படி கிராம நிர்வாக அலுவலருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . மற்ற வி ஏ ஓ க்கள் இதை பார்த்து கொஞ்சம் திருந்தினால் மக்கள் அலையவேண்டியதில்லை மனம் வருந்த வேண்டியதில்லை.
Rate this:
Cancel
Indian - chennai,இந்தியா
08-ஜூலை-202117:37:37 IST Report Abuse
Indian இதை மற்ற வீ ஏ வோ பார்த்து திருத்திக்கொள்ளவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X