இது உங்கள் இடம் : அனைவரையும் விடுதலை செய்யுங்கள்!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : அனைவரையும் விடுதலை செய்யுங்கள்!

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (54)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஜூலி வில்சன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் பிரதமர் இந்திராவை கொடூரமாக கொலை செய்தோர் துாக்கிலிடப்பட்டனர். அதைவிட கொடூரமாக கொலை செய்யப்பட்டவர், முன்னாள் பிரதமர் ராஜிவ். அந்த கொடூர குண்டு வெடிப்பில் ராஜிவ் மட்டும் பலியாகவில்லை; போலீஸ்காரர்கள், பொதுமக்கள் என 14 பேர் உடல் சிதறி

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஜூலி வில்சன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் பிரதமர் இந்திராவை கொடூரமாக கொலை செய்தோர் துாக்கிலிடப்பட்டனர். அதைவிட கொடூரமாக கொலை செய்யப்பட்டவர், முன்னாள் பிரதமர் ராஜிவ். அந்த கொடூர குண்டு வெடிப்பில் ராஜிவ் மட்டும் பலியாகவில்லை; போலீஸ்காரர்கள், பொதுமக்கள் என 14 பேர் உடல் சிதறி பலியாகினர். அந்த கொலைகார பாதகர்கள் இன்று வரை சகல வசதிகளுடன் சிறையில் வாழ்ந்து வருகின்றனர்.latest tamil newsகொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரும் அரசியல்வாதிகள், அந்த குண்டு வெடிப்பில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை கொஞ்சமும் யோசிக்கவில்லையே! குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிர் தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி அனுசுயா டெய்சி கூறியது 'தமிழின' போர்வையாளர்களின் காதில் விழுந்ததா, இல்லையா என தெரியவில்லை. 'குண்டு வெடிப்பால், என் உடலின் இடதுபுறம் முழுவதும் சிதைந்தன. என் கையில் மூன்று விரல்கள் காணவில்லை. கொலையாளிகளை விடுவிக்கட்டும்; ஆனால் அவர்களால் இறந்தோருக்கு உயிர் கொடுத்து எழுப்பிட முடியுமா?' என, அவர் கேள்வி எழுப்பியுள்ளாரே... அதற்கு பதில் இருக்கிறதா? ராஜிவின் படுகொலை திட்டமிட்டு, அதன் விளைவு என்ன என்பது அறிந்து செய்யப்பட்டது. அதற்கு மன்னிப்பே கிடையாது.


latest tamil newsஎன்ன காரணத்திற்காக இந்த தலைவர்கள், கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்புகின்றனர்? அவர்களுக்கு உயிர் பயத்தை காட்டியிருக்கலாம் அல்லது வாங்கிய பணத்திற்காக குரல் கொடுக்கலாம். அரசியல்வாதிகள், ராஜிவ் கொலையாளிகளுக்காக மட்டும் குரல் எழுப்ப கூடாது; கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என, போராட வேண்டும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X