அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., தவறுகளுக்கு ஊடகங்கள் முட்டு கொடுக்கின்றன' ; மாஜி அமைச்சர்

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
செஞ்சி: ''தி.மு.க., ஆட்சியின் தவறுகளை வெளிக் கொண்டு வராமல், ஊடகங்கள் முட்டுக் கொடுக்கின்றன,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் நடந்த அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அது ஸ்டாலினுக்கே தெரியும். அவரே அதை ஒப்புக்
ADMK, ExMinister, CVShanmugam, DMK, Media, அதிமுக, முன்னாள் அமைச்சர், சிவி சண்முகம், திமுக, தவறுகள், ஊடகங்கள்

செஞ்சி: ''தி.மு.க., ஆட்சியின் தவறுகளை வெளிக் கொண்டு வராமல், ஊடகங்கள் முட்டுக் கொடுக்கின்றன,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் நடந்த அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அது ஸ்டாலினுக்கே தெரியும். அவரே அதை ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெறும்.

பெட்ரோல் விலையைக் குறைப்போம், காஸ் மானியம் கொடுப்போம், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் தருவோம் எனக் கூறியது என்னவாயிற்று என கேட்டால், ஆட்சிக்கு வந்து விட்டோம் என்ற ஆணவத்தில் நாங்கள் என்ன தேதி சொன்னோமா என நிதி அமைச்சர் பதில் சொல்கிறார்.


latest tamil news


அ.தி.மு.க.,வின் சில தேர்தல் வியூகம் தி.மு.க.,விற்கு சாதகமாகி விட்டது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்துள்ளோம். ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என தமிழக மக்கள் ஓட்டு போடவில்லை. ஊடகங்கள் தி.மு.க., ஆட்சியை தாங்கி, முட்டு கொடுத்து, தவறுகளை வெளிக்கொண்டு வராமல் உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி பார்ப்பேன், அதுல திமுக வுக்கு என்னமா முட்டு குடுக்குறானுக, மத்த கட்சி காரர்கள் கருத்தை சொல்ல விடாமல் குறுக்க குறுக்க கேள்வி கேட்டு பேச விடாமல் செய்வார்கள். சன் குழும தொலைக்காட்சி சேனல்கள் பார்ப்பது குறைத்துக் கொண்டேன், எவ்வளவு விளம்பரம் | எரிச்சலாக இருக்கும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-ஜூலை-202120:27:19 IST Report Abuse
M  Ramachandran ஷண்முகம் அவர்கள் பதிவி நல்ல பதிவு. உந்மயும் கூட.. பணம் ஊடகங்களை மட்டுமல்ல ஒரு பெரிய சினிமா உட்ப-அட பெரிய கூட்டத்தையே விலைக்கு வாங்கி உள்ளது. இதை யாராலும் நிறுத்த முடியாது. மனோஜை துண்டு கருன்னா அடித்து சேர்த்து வைத்த பணத்தினால் பின்னவருக்கு ராஜ பாட்டை அமைத்து கொடுத்துள்ளது. என்ன தான் ஊழல் நடந்தாலும் அதை ஊடகங்கள் அமுக்கி நசுக்கி பிதூக்கி வெளியில் தெரியாமல் செய்து விடும். பணத்தின் மகிமை.அது தமிழகத்தை நன்றாக ஆட்டு விக்கிறது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-ஜூலை-202120:22:49 IST Report Abuse
M  Ramachandran கொள்ளை அடித்த பணம் ஊடகங்கள் என்ன பாதாளம் வரை பாய்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஆறுமாதம் போலாகட்டும் சுய ரூபம் வெளியில் வரும்.இப்போ ஜால்ரா அடிக்கும் கூட்டங்கள் தலையில் அடித்து கொண்டு குயோ முறையோ என்று அலறும் சத்தம் கேட்கும்.அந்த பணத்தில் கொஞ்சம் மம்முதாவிற்கு கொடுத்தால் தீ முக்க்க விற்கு நல்ல துணையாக இன்னும் வீரு கொண்டு மோடியை தாக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X