வங்க தேசத்தில் உலகின் குள்ளமான பசு: பார்க்க திரளும் பொதுமக்கள்

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
டாக்கா: வங்கதேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. இது 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது.இந்த பசுவின் படங்கள் சமூக

டாக்கா: வங்கதேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. இது 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது.



latest tamil news



இந்த பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


latest tamil news



கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nallavan - manigramam,பஹ்ரைன்
08-ஜூலை-202122:59:19 IST Report Abuse
nallavan இறைவனின் படைப்பு அற்புதம்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-202122:24:33 IST Report Abuse
DARMHAR இந்த பசுவை மிருக காட்சி சாலையில் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.. அவ்வாறு இல்லை என்றால் சிலர் தங்கள் உணவிற்காக பிஸ்மில்லா செய்து விடுவார்கள்.
Rate this:
Cancel
agni - chennai,இந்தியா
08-ஜூலை-202121:29:56 IST Report Abuse
agni எல்லாம் நம் மண்ணின் நாட்டு மாடுகள் தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X