வடகொரியாவில் அதிகரிக்கும் உணவுப் பஞ்சம்?
வடகொரியாவில் அதிகரிக்கும் உணவுப் பஞ்சம்?

வடகொரியாவில் அதிகரிக்கும் உணவுப் பஞ்சம்?

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
பியாங்யங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாளுக்குநாள் உடல் எடை குறைந்த வண்ணம் உள்ளார் என தென் கொரிய ஊடகங்கள் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகின்றன. அவருக்கு நீரிழிவு நோய்த் தாக்கி உள்ளதாகவும் இதனால் அவர் விரைவில் பதவி விலக உள்ளதாகவும் பலவித செய்திகள் உலா வருகின்றன. ஆனால் இருண்ட நாடான வடகொரியாவில் என்ன நடந்தாலும் அது வெளியுலகத்துக்கு தெரியாது. குறிப்பாக சர்வதேச
வடகொரியாவில் அதிகரிக்கும் உணவுப் பஞ்சம்?

பியாங்யங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாளுக்குநாள் உடல் எடை குறைந்த வண்ணம் உள்ளார் என தென் கொரிய ஊடகங்கள் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகின்றன. அவருக்கு நீரிழிவு நோய்த் தாக்கி உள்ளதாகவும் இதனால் அவர் விரைவில் பதவி விலக உள்ளதாகவும் பலவித செய்திகள் உலா வருகின்றன. ஆனால் இருண்ட நாடான வடகொரியாவில் என்ன நடந்தாலும் அது வெளியுலகத்துக்கு தெரியாது. குறிப்பாக சர்வதேச ஊடகங்களின் பார்வைக்கு வருவது மிகக் கடினம்.latest tamil news

இதுகுறித்து தென் கொரியாவின் உளவு நிறுவனத் தலைவர் கிம் யுங் கீ கூறியதாவது: கிம் ஜாங் உன் பத்திலிருந்து இருபது கிலோவரை எடை குறைந்து உள்ளார். அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பெரிய நோய் எதுவும் இல்லை. கிம் ஜாங் உன் உடலுக்கு தீவிர உடல் சோர்வு அல்லது பாதிப்பு ஏற்பட்டால் வெளிநாட்டில் இருந்து மருந்துகள் ஏற்றுமதியாகும். ஆனால் வடகொரிய அரசு அவ்வாறு எதுவும் இறக்குமதி செய்யவில்லை. மேலும் தற்போதுகூட கிம் ஜாங் உன் பல மணிநேரம் அரசின் முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். கிம் ஜாங் உன் பரம்பரைக்கே இதய நோய் தாக்கம் உள்ளது. உடல் பருமன் காரணமாக கிம் ஜாங் உன் 140 கிலோ எடைவரை சென்றது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதத்தில் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே உள்ள வர்த்தகம் 81 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் பயிர்கள் சேதம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக என்றும் ஏற்கனவே கிம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
09-ஜூலை-202110:44:03 IST Report Abuse
Kalaiselvan Periasamy இதெல்லாம் ஒரு நாடா ? உலக வரை படத்தில் இருந்து அழிக்க பட வேண்டிய ஒன்று . பணத்தை அழிவிற்கு பயன்படுத்தி விட்டு இப்போது மக்கள் பஞ்சத்தில் இருக்கிறார்களாம் ? உலக நாடுகலின் அமைப்பும் ஒரு வெத்து வேட்டு அமைப்பு .
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
09-ஜூலை-202110:36:58 IST Report Abuse
S.P. Barucha கொடுங்கோலன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் பார்த்தல் அப்படி தெரிய வில்லை. இவனது தலை முடிவேட்டை தமிழகத்தில் இளைஞர்கள் வெட்டிக்கொள்வதை தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-ஜூலை-202109:08:28 IST Report Abuse
Lion Drsekar அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் ஒரு பந்தின் மீது இருக்கும் திட்டுக்கள் மீது நடமாடிக்கொண்டு திரியும் மனித மிருகங்கள் ( மன்னிக்கவும், அந்த அளவுக்கு மனித நேயம் அறவே ஒழிய காரணமானவன் இந்த மனிதன் மற்றும் அவனது சட்டங்கள், ) தாங்கள் மட்டுமே வாழப்பிறந்தவர்கள் என்று எண்ணாமல் பலரில் நாமும் ஒருவர் என்ற நோக்கில் செயல்பட்டால், உலகத்தை சிறிது நாள் அழிவில் இருந்து தள்ளிப்போடலாம். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X