சென்னை : தமிழக பா.ஜ. தலைவராக இருந்த முருகன் மத்திய அமைச்சரான நிலையில் புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பா.ஜ. தலைவராக இருந்த முருகன் நேற்று முன்தினம் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் வகித்த தலைவர் பதவிக்கு மாநில துணை தலைவர்களாக உள்ள நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோரில் ஒருவரை நியமிப்பது குறித்து தேசிய தலைமை பரிசீலித்தது.இந்நிலையில் அண்ணாமலையை தமிழக தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இந்த தகவலை தேசிய பொதுச் செயலர் அருண்சிங் நேற்றிரவு அறிவித்தார்.

ஐ.பி.எஸ். அதிகாரி
கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து விட்டு 2020ல் பா.ஜ.வில் சேர்ந்தார். சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.நேரடி அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பணியாற்ற கட்சியில் இளைஞர்களை அதிகம் சேர்த்து தமிழக பா.ஜ.வை வலுப்படுத்த தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.இதன் காரணமாகவே 37 வயது வாலிபரான அண்ணாமலையை மாநில தலைவராக கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE