சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

இப்படி நடந்துடுச்சே...!

Added : ஜூலை 08, 2021
Share
Advertisement
இப்படி நடந்துடுச்சே...!'இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக் கூடாது' என, கண்களை கசக்குகிறார் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களுக்கும் தலைநகர் டில்லியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீருக்கு சாணக்யாபுரி பகுதியில் பங்களா உள்ளது; இது, ஜம்மு - காஷ்மீர் இல்லம் என அழைக்கப்படுகிறது. இதில்,

அக்கம் பக்கம்


இப்படி நடந்துடுச்சே...!



'இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக் கூடாது' என, கண்களை கசக்குகிறார் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களுக்கும் தலைநகர் டில்லியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீருக்கு சாணக்யாபுரி பகுதியில் பங்களா உள்ளது; இது, ஜம்மு - காஷ்மீர் இல்லம் என அழைக்கப்படுகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
சமீபத்தில் மனோஜ் சின்ஹாவின் மகனுக்கு டில்லியில் திருமணம் நடந்தது. இதற்காக வந்திருந்த விருந்தினர்கள் காஷ்மீர் இல்லத்தில் தங்கியிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பே மனோஜ் சின்ஹா, இந்த அறைகளை, 'புக்' செய்து விட்டார். இந்த நேரம் பார்த்து, ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க, அங்குள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த தலைவர்கள், தங்கள் உதவியாளர்களுடன் டில்லி வந்து சேர்ந்தனர்; இவர்கள் தங்குவதற்கு காஷ்மீர் இல்லத்தில் இடம் இல்லை.ஒரே நாளில் மகனின் திருமணமும், அனைத்துக் கட்சி கூட்டமும் நடந்ததால், தவித்துப் போய் விட்டார் மனோஜ் சின்ஹா. வேறு வழியில்லாமல் அரசியல் கட்சி தலைவர்களை, டில்லி பிரித்விராஜ் சாலையில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்து சமாளித்தார். ஆனாலும், 'ஒரு முக்கியமான கூட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வந்தபோது, அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டோமே...' என, இன்னும்
வருந்துகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X