பெங்களூரு: முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும், கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்து வருவதால், அவர் செய்வதறியாமல் தவித்து வருகிறார்.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி சொந்த கட்சி
யினரே போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
இந்நிலையில், எடியூரப்பாவின் அரசியல் செயலரான எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா நேற்று கூறியதாவது:கர்நாடகாவில் பா.ஜ., வளர்ச்சி அடைந்ததற்கு எடியூரப்பாவே காரணம். அவரை விமர்சிப்பது, கட்சியை விமர்சிப்பதற்கு சமம். அவருக்கு எதிராக குரல் கொடுப்போரை எச்சரிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., தலைமையை சந்திக்க இருக்கிறோம். எடியூரப்பாவை விமர் சிக்கும் நபர்களை நீக்கக்கோரி, தலைமையிடம் கோரிக்கை வைக்க
உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடக பா.ஜ., வில் எடியூரப்பாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் மாறி மாறி குரல் கொடுப்பதால், அவர் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE