ஆப்கன் போலீசாருக்கு ஜூடோ பயிற்சி :துருக்கி சென்றனர் ஜப்பான் போலீசார்

Added : ஜூலை 21, 2011
Advertisement
ஆப்கன் போலீசாருக்கு ஜூடோ பயிற்சி :துருக்கி சென்றனர் ஜப்பான் போலீசார்

டோக்கியோ : ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு ஜூடோ பயிற்சி வழங்குவதற்காக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆறு போலீஸ் அதிகாரிகள் துருக்கியில் முகாமிட்டுள்ளனர். கடந்த 2001ம் ஆண்டில் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டது முதல், ஆப்கனில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு முயற்சிகளை ஆப்கன் அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆப்கன் போலீசாருக்கு ஜூடோ தற்காப்புக் கலை பற்றிய பயிற்சி வழங்க முடிவு செய்து, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சியிடம் உதவி கேட்கப்பட்டது.


"ஆப்கனில் இல்லாமல், வேறு ஒரு நாட்டில் பயிற்சி முகாம் நடத்தலாம்,' என, ஜப்பான் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி, துருக்கியில் பயிற்சி முகாம் நடத்த, அந்நாட்டு அரசிடம் உதவி கேட்கப்பட்டது. துருக்கி அரசு சம்மதம் வழங்கியதை தொடர்ந்து, அந்நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள சிவாஸ் நகரில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதற்காக, ஜப்பான் போலீஸ் ஏஜன்சியை சேர்ந்த ஆறு அதிகாரிகள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், எய்ஜி எய்புகு என்பவர், ஜூடோ கலையின் நுணுக்கங்கள் பற்றி விரிவான விளக்கவுரை வழங்குவார். துருக்கிப் போலீசாருக்கு சொந்தமான இடத்தில், வரும் 25ம் தேதியில் துவங்கி அக்டோபர் 7 வரையிலும் நடக்கும் இந்த பயிற்சி முகாமில், ஆப்கன் போலீசார் 500 பேர் கலந்து கொள்கின்றனர்.


இதுகுறித்து டோக்கியோ நகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "" ஜூடோவின் ஒழுக்கம், கட்டுப்பாட்டில் துவங்கி, ஜூடோ பயிற்சி சீருடை அணிவது உட்பட பல்வேறு செய்முறைப் பயிற்சிகள் ஆப்கன் போலீசாருக்கு வழங்கப்படும். தற்காப்புக் கலை பற்றி தெரிந்துகொள்வது, ஆப்கன் போலீசாருக்கு புதிய அனுபவமாக இருக்கும். போலீஸ் பணிக்குரிய ஒழுக்கம் மற்றும் தொழில் முறைகளை உணர, தற்காப்புக் கலையின் ஆற்றல் அவர்களுக்கு உதவும்,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X