தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (18)
Advertisement
ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஷர்மிளா,47 நேற்று ''ஓய்.எஸ்.ஆர்., தெலுங்கானா'' கட்சி (ஓய்.எஸ்.ஆர்.டி.பி) என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கினார். தெலுங்கானாவில் ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் எனவும் சூளுரைத்தார். ஆந்திரா முன்னாள் காங்.,முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன் மோகன்ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து,
Andhra Pradesh CM Jagan Mohan Reddy's தெலுங்கானா  '' ராஜண்ணா ராஜ்யம்'' புதுக்கட்சி, ஷர்மிளா  சூளுரை sister YS Sharmila floats political party in Telangana

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஷர்மிளா,47 நேற்று ''ஓய்.எஸ்.ஆர்., தெலுங்கானா'' கட்சி (ஓய்.எஸ்.ஆர்.டி.பி) என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கினார். தெலுங்கானாவில் ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் எனவும் சூளுரைத்தார்.


ஆந்திரா முன்னாள் காங்.,முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன் மோகன்ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து, ஒய்.எஸ்.ஆர்., - காங்., என்ற புதிய கட்சியை துவக்கினார். 2019ல் பார்லி. லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் நடந்த தேர்தலில், ஓய்.எஸ்.ஆர். கட்சி பெரும்பான்மை பெற்றது. ஜெகன் மோகன் முதல்வரானார். அந்த தேர்தலில், ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா, 47 தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் .இதையடுத்து ஷர்மிளா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி துவங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.


latest tamil news
இந்நிலையில் நேற்று (ஜூலை 8-ம் தேதி) தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாள் என்பதால் , ஐதராபாத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ''ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா'' என்ற பெயரில் புது அரசியல் கட்சி துவக்கி, கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் ஷர்மிளா. அவருடன் தாயார் ஓய்.எஸ்., விஜயம்மாவும் உடனிருந்தார்.
2023-ல் தெலுங்கானா சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு போட்டியாக தனது கட்சியை வளர்த்திட ஷர்மிளா வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.


ராஜண்ணா ராஜ்யம்இது குறித்து ஷர்மிளா கூறியது, தெலுங்கானா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை முதல்வர் சந்திரசேகரராவ் நிறைவேற்றவில்லை. வரும் தேர்தலில் தெலுங்கானாவில் எனது தந்தை கண்ட நல்லாட்சியான '' ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் ( ராஜசேகர ரெட்டியை அவரது ஆதரவாளர்கள் '' ராஜண்ணா''. என அழைப்பதால் ராஜண்ணா ராஜ்யம் ) என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
12-ஜூலை-202115:40:37 IST Report Abuse
ram மத மாற்றம் கண ஜோராக நடக்கும் , ஹிந்துக்களே ஜாக்கிரதை
Rate this:
Hari - chennai,இந்தியா
15-ஜூலை-202112:44:09 IST Report Abuse
Hariதமிழகத்தில் நாள்பட்ட புற்றுநோய் தொடர்கிறது....
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
Rate this:
Cancel
09-ஜூலை-202115:49:07 IST Report Abuse
அப்புசாமி அடிப்பாவிங்களா... அண்ணனுக்கு ஆந்திரா... தங்கைக்கு தெலங்காணான்னு பங்கு பிரிச்சுக்கிடீங்களா... இப்பிடித்தான் குடும்ப சொத்து வெளியே போயிடாம பாதுகாத்துக் கொள்ளணும்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
12-ஜூலை-202115:56:03 IST Report Abuse
VELAN Sஅது மட்டுமில்லை , ராஜசேகர ரெட்டி யின் ஆட்டு குட்டி , அடுத்த கட்சி ஆந்திராவில் இன்னமும் கொஞ்ச நாளில் ஆரம்பிக்குதாம் .இப்படியே போனால் , நாமெல்லாம் என்னத்துக்கு , நமக்கு கட்சி ஆரம்பிக்கவும் தெரியலை , இது மாதிரி ஒரு இழவும் தெரிய மாட்டேங்குது , என்ன செய்ய . எதை கொண்டு எங்க கூக்கணும் என்று அவிகளுக்கு தெரியுது , நமக்கு தெரிய மாட்டேங்குது ....
Rate this:
Hari - chennai,இந்தியா
15-ஜூலை-202112:45:32 IST Report Abuse
Hariஇயக்குனர்கள் மிக திறமைசாலிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X