அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க., ஒன்றும் குடும்ப கட்சியல்ல!

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழக மேற்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளராக, முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி பொறுப்பேற்க உள்ளாராம்... இதிலிருந்து என்ன தெரிகிறது?'உதயநிதி தான், அடுத்ததாக பட்டம் பெற போகும் இளவரசர்' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் காய்
DMK, MK Stalin, Stalin


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழக மேற்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளராக, முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி பொறுப்பேற்க உள்ளாராம்... இதிலிருந்து என்ன தெரிகிறது?

'உதயநிதி தான், அடுத்ததாக பட்டம் பெற போகும் இளவரசர்' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் காய் நகர்த்துகிறார். தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி எப்படி ஸ்டாலினை உருவாக்கினாரோ, அவ்வாறே உதயநிதியையும் கட்சியில் உயர வழி ஏற்படுத்தப்படுகிறது. அரசியல்வாதிகள் ஒன்றை மறந்து விடுகின்றனர்; இது மன்னர் ஆட்சியல்ல!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே பட்டம் ஏற்க முடியும். அரசியல் கட்சி, குடும்ப சொத்தாக மாறினால் என்னவாகும் என்பதற்கு காங்கிரஸ் ஓர் உதாரணம். ஜனநாயக நாட்டில், குடும்ப ஆட்சி வெகுகாலம் நீடிக்க முடியாது. காங்கிரஸ் குடும்ப கட்சியாக உள்ளதால் தான், வலுவான பா.ஜ.,வை எதிர்க்க முடியவில்லை. 2024 பார்லிமென்ட் தேர்தலிலும், காங்கிரஸ் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான்.


latest tamil news


காங்கிரசில் வேறு யாராவது ஒருவர் தலைமை ஏற்றிருந்தால், மோடி அரசுக்கு கடுமையான போட்டியை கொடுத்து, வரும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றலாம். அது முடியாததால் தான், சரத்பவார் தலைமையில் மூன்றாவது அணி முளைக்கும் அபாயம் ஏற்பட்டு விட்டது. இதுவும் வரும் தேர்தலில் தேறாது என, அவர்களுக்கே தெரியும். காங்., தலைவர்கள் 23 பேர், எப்போது சோனியா குடும்ப அரசியலை எதிர்த்து, 'நோட்டீஸ்' விட்டனரோ, அப்போதே அவர் ஒதுங்கியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், கட்சியை காப்பாற்றி இருக்கலாம்.

இதே கதி தி.மு.க.,வுக்கும் ஏற்படாதா என்ன... தி.மு.க., ஒன்றும் குடும்ப கட்சியல்ல. ஆனால் அத்தகைய தோற்றத்தை, கருணாநிதி சமயோஜிதமாக ஏற்படுத்தி விட்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு பின் அந்த நிலை மாறலாம். குடும்ப கட்சி வெறுப்பால், நெல்லிக்காய் மூட்டையை பிரித்தாற் போல தி.மு.க., சிதறி போகலாம்.குடும்ப கட்சி என்ற சிறையில் இருந்து தி.மு.க., வெளியேற வேண்டும். அது தான், அக்கட்சிக்கு நல்லது.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-ஜூலை-202105:31:23 IST Report Abuse
meenakshisundaram ஏன் இந்த படத்தில் கருணாநிதி தாத்தா ஸ்டாலினை முத்தமிடறதுவும் உதய தன மகனை முத்தமிடறதையும் போடவில்லை ?அப்போதானே திமுக 'குடும்ப' கட்சி இல்லைன்னு சொல்ல முடியும்?
Rate this:
Cancel
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
10-ஜூலை-202102:31:44 IST Report Abuse
Ram Ram USER NAME MUST BE SHORTER AND DECENT: COORDINATOR
Rate this:
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-202101:05:30 IST Report Abuse
TAMILAN அதுவும் தெலுங்கர் கட்சியாக மாற்றி விட்டார்கள். தமிழகத்தில் இருந்து கொண்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X