கடலில் கால் வைக்க தயக்கம்; அமைச்சரை 'அலேக்'காக தூக்கிய தொண்டர்

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (48)
Advertisement
சென்னை : பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ஆய்விற்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் படகில் இருந்து இறங்கும் போது உப்பு நீரில் கால் வைக்க தயங்கிய நிலையில் மாவட்ட கவுன்சிலர் ஒருவரின் கணவர் அவரை துாக்கி வந்து கரையில் சேர்த்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட மணல் திட்டுக்களால் மீனவர்கள்
மீன்வளத்துறை அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ணன், கடல்

சென்னை : பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ஆய்விற்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் படகில் இருந்து இறங்கும் போது உப்பு நீரில் கால் வைக்க தயங்கிய நிலையில் மாவட்ட கவுன்சிலர் ஒருவரின் கணவர் அவரை துாக்கி வந்து கரையில் சேர்த்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட மணல் திட்டுக்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் படகில் சென்று முகத்துவார பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்த பின் படகில் பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதிக்கு வந்தனர்.


latest tamil news


படகு நிறுத்தப்பட்ட இடத்தில் உவர்ப்பு நீரும் சேறும் சகதியுமாக இருந்தது. இறங்கினால் தன் வெள்ளை நிற ஷூ அழுக்காகி விடும் நிலையில் அமைச்சர் படகில் இருந்து இறங்க தயங்கினார். தன்னை துாக்கி செல்லும்படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அப்பகுதி தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஒருவரின் கணவர் மீன்வளத்துறை அமைச்சரை அலேக்காக துாக்கி வந்து கரையில் சேர்த்தார்.


latest tamil news

அமைச்சர் விளக்கம்


இதுகுறித்து பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ''என்னை துாக்கி செல்லுங்கள் என யாரிடமும் கூறவில்லை. அன்பு மிகுதியால் மீனவர்களே என்னை துாக்கிச் சென்றனர். அங்கு என்ன நடந்தது என்பதை மீனவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னை மீனவர்கள் முத்தமிட்டனர்; கட்டிப்பிடித்தனர்'' என்றார்.


latest tamil news

ஜெயகுமார் கண்டனம்


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை படகிலிருந்து துாக்கி செல்லும் வீடியோவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன் 'பாவம் தி.மு.க. அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம். கடல் தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதை கூட தாங்க முடியாத ஒருவரா மீன்வளத்துறைக்குஅமைச்சர்; வெட்கக்கேடு' எனபதிவிட்டுள்ளார்.

சென்னை வெள்ளத்தின் போது தண்ணீரில் நீந்தி சென்று தான் உதவிய படங்களையும் அனிதா ராதாகிருஷ்ணனை தொண்டர்கள் துாக்கி வரும் படத்தையும் வெளியிட்டு 'முன்னாள் மீன்வளம் இந்நாள் மீன்வளம்' என குறிப்பிட்டுள்ளார்.சமூக வலைதளங்களில் அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து வெளியான பதிவு:

மீனவர்களின் வாழ்வாதாரம் கடல். அதில் கால்பட்டால் என் ஷூ நனைஞ்சிடும்னு துாக்கிட்டு போக சொன்னவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடல் தண்ணீரில் கால் படக்கூடாதாம்... ஆனால் மீன் வளத்துறை அமைச்சராம்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
11-ஜூலை-202118:20:31 IST Report Abuse
B. இராமச்சந்திரன் சர்வாதிகாரியின் அமைச்சரவையில் இதெல்லாம் சகஜமப்பா... ஆனால் கொரோனா நேரத்தில் கட்டிபிடித்ததையும், முத்தமிட்டதையும் வெளியில் சொல்லாமலாவது தவிர்த்து இருக்கலாம்...
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
10-ஜூலை-202122:09:44 IST Report Abuse
madhavan rajan முத்தமிட்டார்களா? ஓ அவனா நீ.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூலை-202117:05:16 IST Report Abuse
oce வெய்யிலில் உழைக்கும் மக்களுக்கு காலுக்கு செருப்பு வாங்கி கொடுத்து அவர்கள் கால்கள் வேகாத வேய்யிலில் கால் கொப்பளிப்பை தடுத்திருக்கலாம். மந்திரி ஆகிவிட்டால் கால்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் செருப்பு கேக்குதா.முட்டாள் மக்கள் ஒட்டு போட்டதால் வந்த தெம்மாங்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X