பொது செய்தி

இந்தியா

கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள்: பிரதமர் தகவல்

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.கோவிட் இரண்டாவதுஅலையின் போதுநாடு முழுவதும் சில இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியது. தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுத்தன.நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திலும், கோவிட்
ஆக்ஸிஜன் உற்பத்தி, பிரதமர் மோடி, ஆலோசனை

புதுடில்லி: இந்தியாவில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கோவிட் இரண்டாவதுஅலையின் போதுநாடு முழுவதும் சில இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியது. தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுத்தன.நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திலும், கோவிட் பெருந்தொற்றை கையாளவும், கட்டுப்படுத்துவதற்கும் ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார நிலையங்களை வலுப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார்.


கோவிட் 3வது அலையை சமாளிக்க 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அந்நிதியை கொண்டு 736 மாவட்டங்களில் குழந்தைகள் பிரிவை ஆரம்பித்தல், அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரம் ஐசியு படுக்கைகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்படவுள்ளது.

latest tamil news




இந்நிலையில், இந்தியாவில் 3வது அலை விரைவில் துவங்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஆக்ஸிஜன் கையிருப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக உயர் மட்டக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 3வது அலையை எதிர்கொள்வது குறித்தும் அவர் ஆலோசித்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும், பிஎம்கேர்ஸ் நிதி மூலம் 1500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டிற்கு வரும் போது கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு வரும். ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆக்ஸிஜன் மையங்களை பராமரிக்கவும், செயல்படுத்துவதற்கான பயிற்சியை மருத்துவமனை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dilli -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூலை-202122:51:29 IST Report Abuse
Dilli உத்தரபிரதேசத்தில் காயலான் கடைக்கு போட வேண்டிய Ventilator களை வாங்கி ஊழல் செய்தது போல் இதில் எத்தனை கோடி செய்ய போகிறீர்கள் ஏழைத்தாயின் உத்தமனே மோடி, வாயிலே வடை சுடுவதை நிறுத்து.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-ஜூலை-202121:38:56 IST Report Abuse
Ramesh Sargam நாளை ஒருவேளை வைரஸிலிருந்து நாம் அனைவரும் விடுபட்டாலும், இந்த மருத்துவ ஆக்ஸிஜன் வேறு வழிகளில் பயன் அளிக்கும். ஆனால், Rs.2,500 கோடி செலவழித்து நான்கு பூங்காக்களை சீர் செய்யப்போகிறேன் என்று கூறி அந்த பணத்தை ஆட்டைபோடப்போகிறார்களே அதை நினைத்தாதான் நெஞ்சு பதைபதைக்கிறது.
Rate this:
Cancel
09-ஜூலை-202118:31:30 IST Report Abuse
அப்புசாமி மக்களை படுத்த படுக்கையா வெச்சிருக்க எல்லா ஏற்பாடுகளும் ரெடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X