பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 11ல் புதிய காற்றழுத்த தாழ்வு; தமிழகத்திற்கு மிக கனமழை வாய்ப்பு

Updated : ஜூலை 09, 2021 | Added : ஜூலை 09, 2021
Share
Advertisement
சென்னை: வங்கக்கடலில் நாளை மறுநாள் (ஜூலை 11) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மேற்கு - வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர பகுதிகளில் ஜூலை 11-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால்,
New Depression, Forming, BayofBengal, HeavyRain,

சென்னை: வங்கக்கடலில் நாளை மறுநாள் (ஜூலை 11) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மேற்கு - வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர பகுதிகளில் ஜூலை 11-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வரும் வாரத்தில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறதா மற்றும் எந்த திசையை நோக்கி நகரும் என்பது குறித்த விவரங்கள் அளிக்கப்படவில்லை. அதேபோல் தென்மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளிலும் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் வரும் 2 நாட்களுக்கு கோவை, நீலகிரி, டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X