சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஏமாற்றமான எதிர்பார்ப்பு!

Added : ஜூலை 09, 2021
Share
Advertisement
ஏமாற்றமான எதிர்பார்ப்பு!'கடைசியில் இப்படி ஆகி விட்டதே...' என, சோகத்துடன் கூறுகின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள். பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி, நான்கு ஆண்டுகளாக சிறையில் வாடினார்.அவர் சிறைக்குப் போனதும் கட்சி தள்ளாடியது. அவரது மகன் தேஜஸ்வி, ஓரளவு கட்சியை

அக்கம் பக்கம்


ஏமாற்றமான எதிர்பார்ப்பு!




'கடைசியில் இப்படி ஆகி விட்டதே...' என, சோகத்துடன் கூறுகின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள். பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி, நான்கு
ஆண்டுகளாக சிறையில் வாடினார்.அவர் சிறைக்குப் போனதும் கட்சி தள்ளாடியது. அவரது மகன் தேஜஸ்வி, ஓரளவு கட்சியை திறம்பட நடத்தினாலும், கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியில் இருந்தனர். ஒரு வழியாக நான்கு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின், சமீபத்தில் வெளியில் வந்தார் லாலு. பீஹாருக்கு வராமல் தன் மகள் வீட்டில் டில்லியில் தங்கியிருந்தார். 'எங்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார். நக்கல், நையாண்டி பேச்சுடன் எதிர்க்கட்சிகளை பந்தாடுவார்' என, அவரது கட்சியினர் கூறினர்.
சமீபத்தில் கட்சி தொண்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக லாலு பேசினார். நான்காண்டு சிறைவாசம் அவரை சோர்வடையச் செய்திருந்தது. வயது மூப்பும், அவரை தளர்வடைய வைத்து, பாவம் பரிதாபமாக காணப்பட்டார். அவரது பேச்சிலும் வழக்கமான நக்கல், நையாண்டி இல்லை. கடமைக்காக சில நிமிடங்கள் பேசினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள், 'நாம் தான் அதிகமாக எதிர்பார்த்து விட்டோம். இனி தேஜஸ்விதான் நம்மை கரை சேர்க்க வேண்டும்' என, புலம்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X